IND Vs PAK Cricket Asia Cup 2025 (Photo Credit : @FirstpostSports X)

செப்டம்பர் 22, துபாய் (Sports News): இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், சவுதி அரேபியா, ஓமன் உட்பட 9 ஆசிய நாடுகள் மோதும் ஆசியக்கோப்பை 2025 (Asia Cup 2025) கிரிக்கெட் போட்டி தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதுவரை 14 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இன்னும் நான்கு போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில், நேற்று இந்திய தேசிய கிரிக்கெட் அணி - பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி (India - Pakistan Cricket Match) இடையே பலப்பரீட்சை நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்திருந்தது. இதனை அடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி 18.5 வது ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்தது. IND Vs PAK Asia Cup 2025: மாஸ் வெற்றி! இந்தியா - பாகிஸ்தான் ஆசியக்கோப்பை 2025 போட்டியில் அசத்தல்.! மாயாஜாலம் செய்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்.! 

இந்தியா எதிர் பாகிஸ்தான் அடுத்த போட்டி (India Vs Pakisthan Next Match 2025) :

இதற்கு முன்னதாக கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இந்தியா - பாகிஸ்தான் அணி இடையே நடைபெற்ற போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி அடைந்தது. இந்த இரண்டு வெற்றியும் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்த போட்டி எப்போது? என்று எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை 2025 சூப்பர் 4 பிரிவில் (Super Four Match) இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ள மற்றொரு வாய்ப்பு இருக்கிறது. இந்த வாய்ப்புக்கு இரண்டு அணிகளும் அடுத்தடுத்து தொடர் வெற்றியை குவித்து வந்தால் இறுதிப் போட்டியில் இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா Vs பாகிஸ்தான் எதிர்பார்ப்பு :

ஒருவேளை இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் (IND Vs PAK) தேர்வாகி இறுதிப்போட்டி நடந்தால் அது மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் என்றும், அந்த வெற்றி கொண்டாடப்படும் என்றும் நம்பப்படுகிறது. ஆசியக்கோப்பை 2025 இறுதிப்போட்டி செப்டம்பர் 28-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கி நடைபெறும். இதன் நேரலை காட்சிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் சோனி லைவ் ஓடிடி பிளாட்பார்ம்களில் காணலாம்.