ஜனவரி 25, சேப்பாக்கம் (Sprots News): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து (Team England) கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் (IND Vs ENG T20i Series 2025), 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் (IND Vs ENG ODI Series 2025) கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது. இந்த போட்டிகளில் டி20 பிரிவில் முதல் ஆட்டம் மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து நடைபெற்ற நிலையில், முதல் ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்தது. இந்த ஆட்டங்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சி, ஓடிடியில் டிஸ்னி ஹாட் ஸ்டார் (Disney Hotstar) பக்கங்களில் நேரலையில் பார்க்கலாம். இன்று சென்னை சேப்பாக்கம் (Chepauk Cricket Stadium) கிரிக்கெட் மைதானத்தில், இரண்டாவது டி20 ஆட்டம் நடைபெற்றது. IND Vs ENG T20i: இந்திய அணிக்கு 165 ரன்கள் இலக்கு.. சுவாரஷ்யம் கண்ட சென்னை சேப்பாக்கம் மைதானம்.!
இந்திய அணிக்கு 165 ரன்கள் டார்கெட்:
போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி (India Cricket Team) பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணி (England Cricket Team) பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணியின் சார்பில் விளையாடிய ஜோஸ் பட்லர் 30 பந்துகளில் 45 ரன்னும், ப்ரைடன் கார்ஸ் 17 பந்துகளில் 31 ரன்னும், ஜேமி ஸ்மித் 12 பந்துகளில் 22 ரன்னும் அதிகபட்சமாக அடித்திருந்தனர். இதனால் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியின் சார்பில் பந்து வீசியவர்களில் வருண் சக்கரவர்த்தி (Varun Chakravarthy), அக்சர் படேல் (Axar Patel) ஆகியோர் தலா 2 விக்கெட்டையும், அர்ஷிதீப் (Arshdeep Singh), வாஷிங்க்டன் (Washington Sundar), ஹர்திக் (Hardik Pandya), அபிஷேக் (Abhishek Sharma) ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தி இருந்தனர்.
இந்தியா அசத்தல் வெற்றி:
166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள், அதிரடியான பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். முதலில் களமிறங்கிய சஞ்சு, அபிஷேக் ஆகியோர் 3 ஓவருக்குள் வெளியேறினாலும், இருவரும் அதிரடி ஆட்டத்துக்கு தொடக்கத்திலேயே அடித்தளமிட்டு கொடுத்தனர். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா 55 பந்துகளில் 72 ரன்கள் அடித்து விளாசி இருந்தார். வாஷிங்க்டன் சுந்தர் 19 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்தார். இதனால் இந்திய அணி இறுதியி 8 விக்கெட் இழப்புக்கு, 19.2 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது. இங்கிலாந்து அணியின் சார்பில் பந்து வீசியவர்களில் ப்ரைடன் கார்ஸ் (Brydon Carse) 3 விக்கெட்டையும், ஜோப்ரா, மார்க், ஆடில், ஜேம், லைம் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றி இருந்தனர்.
இதனால் இரண்டாவது போட்டியிலும் வெற்றி அடைந்து இந்திய அணி 5 டி20 போட்டியில் இரண்டை கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறது. அடுத்த ஆட்டம் ஜனவரி 28, 2025 அன்று குஜாரத்த்தில் உள்ள ராஜ்கோட் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.
லக் இல்லை திலக் (No Luck, it's Tilak):
Luck ❎
Tilak ✅✅✅#INDvENGOnJioStar #KhelAasmani #TilakVarma pic.twitter.com/5VLSfyu196
— Disney+ Hotstar (@DisneyPlusHS) January 25, 2025
தனது ஸ்டைலில் வெளுத்து வாங்கிய திலக் வர்மா:
Up and running in the chase! 💥
Tilak Varma gets going in style 😎
Fifty up for #TeamIndia in the 5th over
Follow The Match ▶️ https://t.co/6RwYIFWg7i#INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/Dzdd5tgiPL
— BCCI (@BCCI) January 25, 2025