IND Vs ENG T20i 2025 (Photo Credit: @BCCI X)

ஜனவரி 24, சேப்பாக்கம் (Sprots News): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து (Team England) கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் (IND Vs ENG T20i Series 2025), 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் (IND Vs ENG ODI Series 2025) கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது. இந்த போட்டிகளில் டி20 பிரிவில் முதல் ஆட்டம் மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து தொடங்கியது. முதல் ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்தது. சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டிகள், நியூசிலாந்து எதிராக இந்தியாவில் நடந்த ஆட்டங்கள் என தடுமாறிக்கிடந்த இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்தில் வெற்றி அடைந்து, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. இந்த ஆட்டங்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சி, ஓடிடியில் டிஸ்னி ஹாட் ஸ்டார் (Disney Hotstar) பக்கங்களில் நேரலையில் பார்க்கலாம். இன்று சென்னை சேப்பாக்கம் (Chepauk Cricket Stadium) கிரிக்கெட் மைதானத்தில், இரண்டாவது டி20 ஆட்டம் நடைபெறுகிறது. IND Vs ENG 2nd T20I: இங்கிலாந்திற்கு எதிரான 2வது டி20 போட்டி.. டாஸ் வென்று இந்தியா பவுலிங் தேர்வு..!

இந்திய அணிக்கு 165 ரன்கள் டார்கெட்:

போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி (India Cricket Team) பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணி (England Cricket Team) பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணியின் சார்பில் விளையாடிய ஜோஸ் பட்லர் 30 பந்துகளில் 45 ரன்னும், ப்ரைடன் கார்ஸ் 17 பந்துகளில் 31 ரன்னும், ஜேமி ஸ்மித் 12 பந்துகளில் 22 ரன்னும் அதிகபட்சமாக அடித்திருந்தனர். இதனால் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியின் சார்பில் பந்து வீசியவர்களில் வருண் சக்கரவர்த்தி (Varun Chakravarthy), அக்சர் படேல் (Axar Patel) ஆகியோர் தலா 2 விக்கெட்டையும், அர்ஷிதீப் (Arshdeep Singh), வாஷிங்க்டன் (Washington Sundar), ஹர்திக் (Hardik Pandya), அபிஷேக் (Abhishek Sharma) ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தி இருந்தனர்.

வருண் சக்கரவர்த்தியின் அசத்தல் செயல்பாடு: