
மார்ச் 02, துபாய் (Sports News): துபாயில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில், 12 வது ஆட்டத்தில் இன்று இந்தியா - நியூசிலாந்து (IND Vs NZ Cricket) அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இன்றைய ஆட்டம் இரண்டு அணிகளுக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் இரண்டு இடங்களை தக்க அளிப்பதில் முக்கியம் என்பதால், இரண்டு அணிகளும் வெற்றிக்காக போராடுகிறது. IND Vs NZ Toss Update: சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா பேட்டிங்.. டாஸ் வென்ற நியூசிலாந்து.. எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள்.!
ஷுப்மன் ஹில் எல்பிடபிள்யு அவுட்:
இந்நிலையில், தொடக்கத்தில் களமிறங்கிய இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர், எதிர்கால இந்திய கிரிக்கெட் அணியின் தூண் என ரசிகர்களால் வருணிக்கப்படும் ஷுப்மன் ஹில், 7 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். மேத் ஹென்றி வீசிய பந்தில், 2.5 வது ஓவரில் எல்பிடபிள்யு முறையில் விக்கெட் இழந்து அவர் வெளியேறினார்.
ஷுப்மன் ஹில் அவுட்:
Shubman Gill dismissed for 2 in 7 balls. pic.twitter.com/Slv9KYMkn5
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 2, 2025