Suraikai (Photo Credit: Freepik)

ஜூலை 14, சென்னை (Health Tips): ஆதியில் இருந்து மனிதனின் உணவில் முக்கிய இடம்பிடித்த சுரைக்காய் (Calabash / Suraikai), தன்னகத்தே பல நன்மைகளை கொண்டது ஆகும். சுரைக்காய் நமது உடல் சூட்டினை குறைக்கும், சிறுநீரக கோளாறு சரியாகும். வைட்டமின் பி, சி சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது.

சுரைக்காயில் நீர்சத்து 96%, இரும்புசத்து 3%, தாது உப்பு 0.5%, பசிப்ராஸ், புரதம், கார்போஹைட்ரேட் போன்றவையும் உள்ளன. சுரைக்காயின் சதையை ரசமாக்கி, அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு சரியாகும்.

அஜீரண கோளாறு இருப்பவர்கள் சுரைக்காயை சாப்பிட்டு வரலாம். கோடையில் சுரைக்காய் தாகத்தை சரி செய்யும். நாவறட்சியை நீக்கும். கை, கால் எரிச்சல் சரியாகும். நீரிழிவு பிரச்சனை கொண்டவர்கள் அவ்வப்போது சுரைக்காயை உணவில் பயன்படுத்தலாம்.

வெப்பத்தினால் ஏற்படும் தலைவலி சரியாக சுரைக்காயின் சதையை எடுத்து நெற்றியில் பற்றுபோடலாம். வெப்ப நோய்கள் ஏற்படாது. நமது உடலில் இருக்கும் தேவையற்ற வியர்வை சிறுநீரகம் வழியே வெளியேறும். நரம்புகளுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும், உடல் வலுப்படும். Jammu Kashmir: பீகார் தொழிலாளர்கள் மீது ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; பாதுகாப்பு பணியில் அதிகாரிகள்.!

தோல் சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்து சுரைக்காய் தோலுக்கு பொலிவை வழங்கும். கோடையில் வெப்ப நோய்களை சரியாக்கும். சிறுநீரக பிரச்சனை கொண்டவர்கள், நாவறட்சி கொண்டவர்கள் சுரைக்காயை ஷாப்பிங் வேண்டும்.

உணவு மற்றும் மனரீதியான பிரச்சனை தொடர்ந்து ஏற்பட்டால் வாதம், பித்தம், கபம் காரணமாக பல நோய்கள் ஏற்படலாம். சுரைக்காயை மதிய உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொள்வது நல்லது. கணினி சம்பந்தமான வேளைகளில் இருப்போர் கண் எரிச்சல், கண் வலியால் அவதிப்படுவார்கள்.

இவர்கள் சுரைக்காயை சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட கண் சம்பந்த பிரச்சனை சரியாகும். தூக்கமின்மை காரணமாக அவதிப்படுவார்கள் சுரைக்காயின் இலையை சமைத்து சாப்பிடலாம். மலச்சிக்கல், குடல் புண்கள் ஏற்பட்டவர்களும், மூலநோய் நோயாளிகளும் சுரைக்காயை சாப்பிடலாம். கல்லீரலை சுத்தப்படுத்தவும் சுரைக்காய் உதவுகிறது.