
ஜூன் 05, லக்னோ (Sports News): சுழற்பந்துக்கு பெயர் போன இந்திய கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவ். தற்போது நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சார்பில் விளையாடிய குல்தீப், தனது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் குல்தீப்பின் பங்களிப்பு மிகப்பெரிய அளவில் கவனிக்கபட்டது. RCB Victory Parade: பெங்களூரு வந்த கிங் கோலி.. ஓடோடி சென்று வரவேற்ற துணை முதல்வர்.. கப் அடித்த கொண்டாட்டத்தில் கர்நாடக மக்கள்.!
எளிமையான முறையில் நடைபெற்ற நிச்சயதார்த்தம் :
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் எளிமையான முறையில் குல்தீப் யாதவுக்கு தனது சிறுவயது தோழியான வன்சிகாவுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அவரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் ரிங்கு சிங் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடருக்கு பின்னர் இருவரின் திருமணமும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இணையப்போகும் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.
குல்தீப் யாதவ் & வன்ஷிகா நிச்சயதார்த்தம் :
#WATCH: Kuldeep Yadav gets engaged to his childhood friend Vanshika in a private ceremony.#KuldeepYadav #Trending #Viral #ViralVideo pic.twitter.com/VTisNGq2F5
— TIMES NOW (@TimesNow) June 5, 2025