செப்டம்பர் 21, கோடம்பாக்கம் (Chennai News): திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி (Palani, Dindigul), நெய்க்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் சென்னையில் உள்ள கோடம்பாக்கம் பகுதியில் இருக்கும் நண்பரின் வீட்டில் தங்கியிருந்து வாடகை கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 09ம் தேதி, ராஜ்குமாரின் வங்கிக்கணக்கில் ரூ.105 பணம் இருந்துள்ளது. இந்நிலையில், அவரது வங்கிக்கணக்கில் ரூ.9,000 கோடி பணம் செலுத்தப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ந்துபோன ஆட்டோ ஓட்டுநர், ஏமாற்று வேலையாக இருக்கலாம் என எண்ணியுள்ளார்.
பின் வங்கிக்கணக்கை சோதனை செய்தபோது ரூ.9,000 கோடி பணம் வந்தது உறுதியானது. பணத்தை சோதனை அடிப்படையில் அனுப்பி பார்க்கலாம் என நண்பருக்கு ரூ.21 பணத்தை அனுப்பவே, பணம் ராஜ்குமாரின் வங்கிக்கணக்கில் இருந்து நண்பருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தனக்கு பணம் கோடிக்கணக்கில் வந்துள்ளதை உறுதி செய்துள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த ராஜ்குமாருக்கு அடுத்த கணமே அதிர்ச்சியாக பணம் அவரின் வங்கிக்கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. Vilampalam Benefits: பற்கள் பிரச்சனையில் இருந்து மாதவிடாய் வரை.. விளாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் லிஸ்ட் இதோ.!
அவரை தொடர்பு கொண்ட தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி நிர்வாகிகள், பணம் தங்களின் கணக்குக்கு தவறுதலாக அனுப்பப்பட்டுவிட்டது. ஆகையால் பணத்தை தாங்கள் செலவு செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி நிர்வாகத்தினர் நேரில் அழைத்தும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், மீதமுள்ள ரூ.21 பணம் கேட்டபோது அங்கு வாக்குவாதம் நடந்ததாக தெரியவருகிறது.
இதுதொடர்பாக வழக்கறிஞரை வைத்து ராஜ்குமார் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தவே, வங்கி அதிகாரிகள் கார் ஓட்டுநர் ராஜ்குமாருக்கு கடன் வழங்குவதாகவும், ரூ.21 ஆயிரம் பணத்தை தர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பின் நடந்த பேச்சுவார்த்தைகளில் சமரசம் எட்டாத நிலையில், ரூ.21 ஆயிரம் பணத்தை அவரே வைத்துக்கொள்ளட்டும் என பேசி முடிக்கப்பட்டுள்ளது. தொகை மிக அதிகம் என்பதால், பாதுகாப்பு கருதி ராஜ்குமார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவிருப்பதாக கூறியுள்ளார். அவருக்கு உயிர் அச்சம் ஏற்பட்டதாவும் தெரியவருகிறது.