செப்டம்பர் 29, சென்னை (Cricket News): ஐசிசி பெண்கள் உலகக்கோப்பை (ICC Women's World Cup) கிரிக்கெட் தொடர் நாளை (செப்டம்பர் 30) முதல் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஸ்ரீலங்கா ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் இந்த தொடர் 02 நவம்பர் 2025ல் நிறைவு பெறுகிறது. இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய தேசிய பெண்கள் கிரிக்கெட் அணி - இலங்கை பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team - Sri Lanka Women's National Cricket Team) மோதுகின்றன. நாளை கவுகாத்தியில் உள்ள பரஸ்பரா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து, இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் ஆட்டம் தொடங்கி நடைபெறுகிறது.
இந்தியா எதிர் இலங்கை பெண்கள் கிரிக்கெட் (India - Sri Lanka Women's Cricket Match):
முதல் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வென்று சாதனை படைக்குமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதே நேரத்தில், அடுத்தபடியாக அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்திய பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி - பாகிஸ்தான் பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Pakistan Women's National Cricket Team) மோதும் ஆட்டம் நடைபெறுகிறது. பின் அக்டோபர் ஒன்பதாம் தேதி தென்னாபிரிக்க பெண்கள் அணியுடனும், அக்டோபர் 12 ஆம் தேதி ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் அணியுடனும் இந்திய அணி பலப்பரீட்சை நடத்துகிறது. அக்டோபர் 19 ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறும் ஆட்டத்திலும், 26 ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு எதிராகவும் களமாடுகிறது. IND Vs PAK Asia Cup 2025: ரன்னர்-அப் பரிசுத்தொகையை தூக்கி எறிந்த பாக்., கேப்டன்.. இந்திய அணி மீது கடும் விமர்சனம்.!
ஐசிசி பெண்கள் உலகக்கோப்பை 2025 (ICC Women's World Cup Cricket Series 2025):
இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினால், இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு அதிகம். காலிறுதி, அரையிறுதி சுற்றுகளும் உள்ளன. ஐசிசி பெண்கள் உலகக்கோப்பை 2025 (ICC Women's Cricket World Cup) இறுதிப் போட்டியில் இந்திய அணி வென்று சாதனை படைக்குமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதே நேரத்தில், சமீபத்தில் நடைபெற்ற ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் (Asia Cup 2025 India Vs Pakistan Final Match), ஆடவர் இந்திய கிரிக்கெட் அணி - பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் திரில் வெற்றி அடைந்தது. இந்த திரில் வெற்றியுடன் ஆசியக்கோப்பை 2025 பட்டத்தை வென்றதைப்போல, பெண்கள் கிரிக்கெட் அணியும் சாதனை படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த போட்டியை ஓடிடியில் நேரலையில் பார்க்க ஜியோ ஹாட்ஸ்டார் செயலியின் சந்தா தேவைப்படும். டிவியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பார்க்கலாம்.
இந்தியா Vs இலங்கை பெண்கள் கிரிக்கெட் பிட்ச் நிலவரம் என்ன? வெற்றி யாருக்கு? (ICC Women's Cricket World Cup 2025 India Vs Sri Lanka Women's Cricket Pitch Report and Winning Prediction):
- போட்டி அணிகள்: இந்தியா W Vs இலங்கை W (India Women's Vs Sri Lanka Women's Cricket)
- நடைபெறும் இடம்: பரஸ்பரா கிரிக்கெட் மைதானம், கவுகாத்தி, அசாம்
- போட்டி முறை: 50 ஓவர்கள்
- போட்டி தொடங்கும் நேரம்: நண்பகல் 03:00 மணி
- நேரலை விபரம்: ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports)
- இந்திய பெண்கள் அணி விக்கெட் கீப்பர்கள்: ரிச்சா கோஷ் (IND-W), அனுஷ்கா சஞ்சீவானி (SL-W)
- பேட்டர்ஸ்: ஸ்மிருதி மந்தனா (IND-W), ஹர்மன்ப்ரீத் கவுர் (IND-W), ஹர்லீன் தியோல் (IND-W)
- ஆல்-ரவுண்டர்கள்: சமரி அதபத்து (SL-W), தீப்தி சர்மா (IND-W), கவிஷா தில்ஹாரி (SL-W)
- பந்து வீச்சாளர்கள்: சுகந்திகா குமாரி (SL-W), கிராந்தி கவுட் (IND-W), ரேணுகா சிங் தாக்கூர் (IND-W)
இந்தியா பெண்கள் Vs இலங்கை பெண்கள் போட்டிக்கு தயாரான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி (India Women's Team Ready to Fight with Sri Lanka Women's Cricket Team):
Bengaluru ✈️ Guwahati
The #WomenInBlue have arrived for the #CWC25 opener 🤩
See you in the stands 🏟️ 🙌
Get your tickets 🎟️ here: https://t.co/vGzkkgwXt4#TeamIndia pic.twitter.com/K5YFDJ7Uda
— BCCI Women (@BCCIWomen) September 29, 2025