மே 15, சென்னை (Cricket News): டாடா ஐபிஎல் 2023 போட்டித்தொடர் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த 61வது ஆட்டத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக்கொண்டன. போட்டியின் முடிவில் 147 ரன்கள் அடித்த கொல்கத்தா அணி வெற்றி அடைந்தது. தனது இலக்கை எட்ட இயலாமல் 144 ரன்கள் எடுத்த சென்னை அணி தோல்வியை சந்தித்து.
இந்த ஆட்டத்தில் இருதரப்பு பந்துவீச்சும் சிறப்பாக இருந்ததால், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியால் ரன்கள் சேர்க்க இயலவில்லை. அதனைத்தொடர்ந்து 148 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியாலும் அதன் இலக்கை எட்ட முடியவில்லை. Road Accident: லாரி – வேன் மோதி பயங்கர விபத்து.. பச்சிளம் குழந்தை, பெண்மணி உட்பட 6 பேர் பரிதாப பலி.!
இந்த நிலையில், சிவம் துபே குறித்து கருத்து தெரிவித்த எம்.எஸ் தோனி, "சிவம் துபே-வால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அவர் எங்களுக்காக வேலை செய்திருக்கிறார்" என்று தெரிவித்தார். நேற்றைய போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானம் அதிர நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.