Sanju Samson & Ajinkya Rahane (Photo Credit: @IPL X)

மார்ச் 26, கவுகாத்தி (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) கிரிக்கெட் தொடரில், இதுவரை ஐந்து ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் ஜெயிண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்ட நிலையில், இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. அதனைத்தொடர்ந்து, ஆறாவது ஆட்டம் இன்று இரவு 07:30 மணியளவில், கௌகாத்தியில் உள்ள பரஸ்பரா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (Kolkata Knight Riders Vs Rajathan Royals) அணிகள் மோதுகிறது. கேகேஆர் Vs ஆர்ஆர் அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டத்தை ஜியோ ஹாட்ஸ்டார் செயலி (Jio HotStar), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) பக்கத்தில் நேரலையில் காணலாம். GT Vs PBKS Highlights: இறுதிவரை போராடிய குஜராத்; அர்ஷ்தீப் சுழலில் சிக்கிய ஷெர்பானே.. பஞ்சாப் அசத்தல் வெற்றி.! 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் (KKR Vs RR):

கொல்கத்தா அணியில் (KKR Squad 2025) சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, ஷிமரோன் ஹெட்மேயர், ஸுபிமன் துபே, வைபவ் சூர்யவன்ஷி, யக்ஷவி ஜெய்ஷ்வால், துருவ் ஜுரல், குணால் ரத்தோர், ரியான் பராக், வானின்டு ஹசரங்கா, அசோக் சர்மா, பஜல்ஹாஸ் பரூகி, குமார் கார்த்திகேயா சிங், ஆகாஷ் மத்வால், ஜோபிரா ஆர்ச்சர், சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, யாதவீர் சிங் சரக், மகேஷ் தீக்சனா, க்வெனா மாபாகா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ராஜஸ்தான் அணியில் (RR Squad 2025) அஜிந்திய ரஹானே, ரிங்கு சிங், மனிஷ் பாண்டே, ரோவ்மன் போவெல், அங்க்ரிஸ் ரகுவன்ஷி, லூவிந் சிசோடியா, குயின்டன் டிகாக், ரஹ்மானுலா குர்பாஸ், அன்றே ரூசல், சுனில் நரேன், அனுகூல் ராய், மொயீன் அலி, வெங்கடேஷ் ஐயர், ரமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, அன்ரிச் நோர்ட்ஜெ, ஸ்பென்சர் ஜான்சன், வைபவ் அரோரா, சேட்டன் சக்கரியா, மயங்க் மார்கண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.