மார்ச் 25, அகமதாபாத் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) தொடரில், இன்று ஐந்தாவது ஆட்டம், குஜராத்தில் உள்ள அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து, இரவு 07:30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் (Gujarat Titans Vs Punjab Kings) அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டத்தில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் முதலில் பௌலிங் தேர்வு செய்தது. இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. GT Vs PBKS Toss Update: ஐபிஎல் 2025: டாஸ் தோற்று பஞ்சாப் அணி பேட்டிங்; சொந்த மண்ணில் வெற்றி பெறுமா குஜராத்?
பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி:
பஞ்சாப் அணியின் சார்பில் விளையாடியவர்களில் பிரியன்ஸ் ஆர்யா 23 பந்துகளில் 47 ரன்கள், ஷ்ரேயஸ் ஐயர் 42 பந்துகளில் 97 ரன்கள், ஓமர்சாய் 15 பந்துகளில் 16 ரன்கள், மர்கஸ் 15 பந்துகளில் 20 ரன்கள், ஷஷாங்க் 16 பந்துகளில் 42 ரன்கள் அடித்து அசத்தினர். 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. இறுதி வரையில் குஜராத்தா? பஞ்சாப்பா? என ரசிகர்கள் மனதில் பரபரப்பு தொற்றிக்கொண்டாலும், இறுதியில் பஞ்சாப் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. குஜராத் அணியின் சார்பில் களமிறங்கிய சாய் சுதர்சன் 41 பந்துகளில் 74 ரன்கள், ஹில் 14 பந்துகளில் 33 ரன்கள், ஜோஸ் பட்லர் 33 பந்துகளில் 54 ரன்கள், ஷெரிபானே 28 பந்துகளில் 46 ரன்கள், எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்தது. இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி அடைந்தது.