Jasprit Bumrah: ஜஸ்பிரிட் பும்ரா - சஞ்சனா தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை குவியும் வாழ்த்துக்கள்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
கடந்த 2021ல் ஜஸ்பிரிட் பும்ரா - சஞ்சனா கணேசனுக்கு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது.
செப்டம்பர் 04, மும்பை (Sports News): இந்திய கிரிக்கெட் அணியில் வலதுகை மட்டைப்பந்து ஆட்டக்காரராக விளங்குபவர் ஜஸ்பிரிட் பும்ரா. இவருக்கு ஏராளமான ரசிகைகள் இருக்கின்றனர். 5 வயதிலேயே தந்தையை இழந்த பும்ரா, ஆசிரியரான தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். Theni Couple Died: மாட்டு கொட்டகைக்குள் சென்ற கணவன் – மனைவி அடுத்தடுத்து மரணம்.. உறவினருக்கு நேர்ந்த சோகம்.. எமனாய் மாறிய பகீர் பின்னணி.!
பின்னாட்களில் அவருக்கு கிரிக்கெட் மீதான ஈர்ப்பு ஏற்பட்டு, தொடர் முயற்சியின் வாயிலாக இந்திய அணியில் இடம்பெற்று, இன்று இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்கமுடியாத நாயகனாக இருக்கிறார்.
கடந்த 2021ம் ஆண்டு சஞ்சனா கணேசனை திருமணம் செய்து, பும்ரா தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில், பும்ரா தந்தையாகியுள்ள செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "எங்களின் குடும்பமும் தற்போது வளர்ந்துவிட்டது. எங்களால் அதை கற்பனை செய்துகூட பார்க்க இயலவில்லை. இன்று காலை அழகிய பையனை நாங்கள் வரவேற்கிறோம். நாங்கள் நிலவில் இருப்பதைப்போல உணருகிறோம். உங்களின் வாழ்த்துக்கள் எப்போதும் வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Our little family has grown & our hearts are fuller than we could ever imagine! This morning we welcomed our little boy, Angad Jasprit Bumrah into the world. We are over the moon and can’t wait for everything this new chapter of our lives brings with it ❤️ - Jasprit and Sanjana pic.twitter.com/j3RFOSpB8Q
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) September 4, 2023
(The above story first appeared on LatestLY on Sep 04, 2023 10:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

