Dell Technologies (Photo Credit: Wikipedia)

செப்டம்பர் 30 , பெங்களூர் (Technology News): அமெரிக்காவில் உள்ள டெக்சர்ஸ் மாகாணத்தில் தலைமையிடத்தை வைத்து, சர்வதேச அளவில் தொழில்நுட்ப ரீதியிலான பொருட்களை உருவாக்குவதில் வல்லமைபெற்ற நிறுவனமாக இருப்பது டெல் (Dell).

இந்நிறுவனம் சாப்ட்வேர், கம்பியூட்டர், லேப்டாப், மவுஸ், கீ போர்ட், ஸ்பீக்கர் உட்பட பல தொழில்நுட்பங்கள் & சாதனங்களை தயாரித்து வழங்குகிறது. தற்போது அந்நிறுவனம் கர்நாடகாவில் புதிய முதலீடு செய்து, நிறுவனத்தை தொடங்க மாநில அரசிடம் விருப்பம் தெரிவித்துள்ளது. Benefits of Roasted Garlic: தினமும் பூண்டை நெருப்பில் சுட்டு சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?.. அசத்தல் டிப்ஸ் இதோ.! 

டெல் நிறுவனத்தின் உயரிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளான மைக்கேல் டூன்தாஸ், ஆலன் ரிச்செய், தர்பேர்ஸ் அஹ்மத் ஆகியோர் அம்மாநில அமைச்சர் எம்.பி பாட்டிலை நேரில் சந்தித்து இது தொடர்பாக பேசி இருக்கின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் தற்போது அரசு கொண்டுள்ள விதிமுறைகளில் சிலவற்றை தளர்த்தினால், டெல் நிறுவனம் தனது நிறுவனத்தை தொடங்க தேவையான அடுத்தகட்ட ஏற்பாடுகளை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்நிறுவனம் ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களை மேற்கொள்ள முதலீடு செய்ய இருக்கிறது.