Regional Meteorological Centre, Chennai

அக்டோபர் 18, சென்னை (Chennai): வடகிழக்கு பருவமழைக்கான சாதகமான சூழல், வளிமண்டல மேல் பகுதியில் நிலவும் கீழடுக்கு சுழற்சி போன்றவை காரணமாக, கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு-கேரளா (Tamilnadu Kerala Rains) மாநிலங்களில் கனமழையானது பெய்து வருகிறது. கேரளாவில் அவ்வப்போது மிக கனமழையும் (Heavy Rain Alert) பெய்து வருகிறது. நேற்று கேரள மாநிலத்தில் உள்ள போதுண்டி அணைப்பகுதியில் 8 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. கொல்லம் மற்றும் பொன்னி பகுதியில் 7 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.

அதேபோல, நேற்று தமிழகத்திலும் (Tamilnadu Rains) மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோழிபோர்விளை பகுதியில் 9 சென்டிமீட்டர் மழையும், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நான்குமுக்கு பகுதியில் 10 சென்டிமீட்டர் மழையும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் 9 சென்டிமீட்டர் மழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் 9 சென்டிமீட்டர் மழையும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் 8 சென்டிமீட்டர் மழையும் அதிகபட்சமாக பெய்துள்ளது.

இந்நிலையில், இன்று சென்னை (Rain Alert Tamilnadu Today) வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேற்கு-வடக்கு திசையில் இது நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். 7th Pay Commission DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு உற்சாக செய்தி; அகவிலைப்படி 4% உயர்வு..! 

Chennai Rains Cloud (Photo Credit: Twitter)

21ஆம் தேதியில் மத்திய அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் 20 ஆம் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும். தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் இருந்து குமரிக்கடல் வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

இதனால் 18-ஆம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தில் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தலைநகர் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறைந்தபட்ச வெப்ப நிலையாக 25 டிகிரி செல்சியசும், அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாகலாம்.

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக இன்று தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், கேரளா-கடலோரப்பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு, அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 கிலோமீட்டர் வேகம் முதல் 55 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்" என எச்சரிக்கப்படுகிறது.