Sneh Rana joins Royal Challengers Bengaluru Replaces Shreyanka Patil (Photo Credit: @WomensCricZone X)

பிப்ரவரி 15, வதோதரா (Sports News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் போட்டிகள் 2025 (TATA Women's Premier League 2025) தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. நேற்று குஜராத் ஜெயிண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Gujarat Giants Vs Royal Challengers Bangalore Women's T20 WPL 2025) அணிகளுக்கு இடையேயான மகளிர் டி20 ஆட்டத்தில், பெங்களூர் அணி அசத்தல் வெற்றி அடைந்தது. இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணியின் சார்பில் ஷ்ரேயன்கா பாட்டில் இடம்பெற்று இருந்தார். இவர் பயிற்சியின்போது எதிர்பாராத விதமாக காயம் அடைந்தார். இதனால் அவர் நடப்பு தொடரில் பங்கேற்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. GG Vs RCB Women's WPL 2025 Highlights: டாடா மகளிர் டி20 பிரீமியர் லீக்.. வெற்றியுடன் தொடங்கிய பெங்களூர் அணி.. ரிச்சா கோஷ், எலிசே அசத்தல் ஆட்டம்.! 

ஆப் ஸ்பின் ஆல்ரவுண்டர் ராணா:

இதுதொடர்பாக டபிள்யு.பி.எல் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "எஞ்சியுள்ள மகளிர் பிரீமியம் லீக் 2025 போட்டியில், பெங்களூர் அணியில் ஷ்ரேயன்கா பாட்டில் (Shreyanka Patil) காயமடைந்ததால், அவருக்கு பதிலாக சிநேஹ் ராணா (Sneh Rana) இடம்பெறுவார். பெங்களூர் அணிக்காக முந்தைய ஆட்டங்களில் 15 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தியவர், நடப்பு தொடர்பில் காயம் காரணமாக விலகி இருக்கிறார். ஆப் ஸ்பின் ஆல்ரவுண்டர் ராணா, முன்னதாக குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார். தற்போது ரூ.30 இலட்சம் வெகுமதியுடன் பெங்களூர் அணியில் இணைத்து, அணிக்காக விளையாட இருக்கிறார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. MI Vs DC Women's WPL 2025: பெண்கள் பிரீமியர் லீக் 2025: டாஸ் வென்று டெல்லி பவுலிங் தேர்வு.. வெற்றித்தனமாக தயாரான பெண் சிங்கங்கள்.! 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ஏற்பட்ட மாற்றம்: