பிப்ரவரி 28, சேப்பாக்கம் (Cricket News): இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டிகள், 22 மார்ச் 2025 முதல் தொடங்கி, 25 மே 2025 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வரை நடைபெற்றுள்ள 17 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித்தொடர்களில், சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super KIngs) அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளது. 5 முறை ரன்னர் பட்டம் பெற்றுள்ளது. 2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் தொடரில் வெற்றிவாகை சூட அணி தீவிர களப்பயிற்சி மேற்கொண்டு வருகிறது. R Ashwin Returns to CSK: "சொர்க்கமே என்றாலும்" - மலரும் நினைவுடன் சிஎஸ்கே அணிக்கு திரும்பிய அஸ்வின்.. நெகிழவைக்கும் வீடியோ வெளியிட்ட நிர்வாகம்.!
தீவிர பயிற்சியில் தல தோனி (Thala Dhoni):
இந்நிலையில், சிஎஸ்கே அணிக்காக விளையாடிய 9 ஆண்டுகளுக்கு பின் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் திரும்பி இருக்கிறார். இதுதொடர்பான வீடியோ நேற்று வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொள்ள எம்.எஸ் தோனி (MS Dhoni) சமீபத்தில் சென்னை வந்திருந்தார். இந்நிலையில், இன்று அவர் பயிற்சியில் ஈடுபடுவது தொடர்பான புகைப்படம் ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டு இருக்கிறது.
எம்.எஸ் தோனி பயிற்சியில் ஈடுபடும் புகைப்படத்தை வெளியிட்ட சிஎஸ்கே நிர்வாகம்:
Year. Long. Wait. 🥺✨#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/CSigQbzMes
— Chennai Super Kings (@ChennaiIPL) February 28, 2025
அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தினமும் பயிற்சி எடுப்பதாகவும் ஆர். அஸ்வின் மனம்திறந்து பேசிய பதிவு:
Yellove remains constant for you, Ash! 💛#WhistlePodu #Yellove 🦁💛@ashwinravi99 pic.twitter.com/INWZgL4Mci
— Chennai Super Kings (@ChennaiIPL) February 28, 2025