
பிப்ரவரி 18, வதோதரா (Sports News): மூன்றாவது டாடா டபிள்யுபிஎல் 2025 (TATA WPL 2025) போட்டிகள், குஜராத்தில் நடைபெற்று வருகிறது. ஐந்தாவது நாள் ஆட்டமான இன்று குஜராத் ஜெயிண்ட்ஸ் (Gujarat Giants WPL 2025) - மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians WPL 2025) அணிகள் மோதிக்கொண்டன. இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி 20 ஓவர்களில் 10 விக்கெட்டையும் இழந்து 120 ரன்கள் அடித்தது. இதனால் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்குகிறது. GG VS MI WPL 2025: பந்துவீச்சில் அசத்திய மும்பை.. திணறிய குஜராத்., தூக்கி நிமிர்த்திய ஹர்லீன், கஷ்வீ.! மும்பைக்கு 121 ரன்கள் இலக்கு..!
தயாளன் ஹேமலதா (Dayalan Hemalatha)-வின் விக்கெட் பறிபோன காட்சிகள்:
இந்நிலையில், இன்றைய ஆட்டத்தின்போது களத்தில் குஜராத் அணியின் சார்பில் விளையாடிக்கொண்டு இருந்த தயாளன் ஹேமலதா, மூன்றாவது நபராக விக்கெட்டை இழந்து வெளியேறினார். தயாளன் ஹேமலதா 3.3 வது ஓவரில், ஹெய்லேய் மேத்திவ்ஸ் பந்தை எதிர்கொண்டார். அவர் பவுண்டரி அல்லது சிக்ஸர் அடிக்க முற்பட்டபோது, பவுண்டரி லைனில் இருந்த மும்பை அணியின் வீராங்கனை அமெலியா கெர் (Amelia Kerr), பந்தை இலாவகமாக பிடித்து விக்கெட்டை வீழ்த்தினார். அவர் கேட்ச் பிடித்த விதம் பலரையும் கவர்ந்தது.
சுழன்று விக்கெட் எடுத்து அசத்திய அமலியா:
WHAT. A. CATCH! 😍👏🏻#AmeliaKerr pulls off a stunner at deep midwicket! 💥 #GujaratGiants lose their third wicket and the pressure is piling on!
📺📱Start Watching FREE on JioHotstar 👉 https://t.co/oX148dtcqm#WPLOnJioStar 👉🏻 Gujarat Giants 🆚 Mumbai Indians | LIVE NOW on… pic.twitter.com/vT0fBLPrUB
— Star Sports (@StarSportsIndia) February 18, 2025