MI Vs GG | WPL T20 2025 (Photo Credit: @WPLT20 X)

பிப்ரவரி 18, வதோதரா (Sports News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 போட்டித்தொடரில், 5 வது ஆட்டம் இன்று மும்பை இந்தியன்ஸ் - குஜராத் ஜெயிண்ட்ஸ் (Mumbai Indians Vs Gujarat Giants WPL T20 2025) பெண்கள் அணி இடையே நடைபெறுகிறது. இந்த ஆட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா, பிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடக்கிறது. இரவு 07:30 மணியளவில் தொடங்கிய ஆட்டத்தில், டாஸ் வென்ற மும்பை அணி பீல்டரிங் தேர்வு செய்தது. இதனால் குஜராத் அணி பேட்டிங் செய்தது. GG Vs MI Women's WPL 2025: மும்பை - குஜராத் அணிகள் பெண்கள் பிரீமியர் லீக் ஆட்டம்; டாஸ் வென்று மும்பை பவுலிங் தேர்வு.! 

பந்துவீச்சில் கலக்கிய மும்பை:

இந்நிலையில், குஜராத் அணியின் சார்பில் களமிறங்கிய வீரர்களில் தொடக்க ஆட்டக்காரர் பெத் முனி (Beth Mooney) 3 பந்துகளில் 1 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். லாரா 7 பந்துகளில் 4 ரன்னும், தயாளன் ஹேமலதா 11 பந்துகளில் 9 ரன்னும், ஆஷ் கார்ட்னர் (Ash Gardner) 10 பந்துகளில் 10 ரன்னும் அடித்து அவுட்டாகி வெளியேறினர். இதனால் குஜராத் அணி 100 ரன்களை கடக்குமா? என்ற அச்சம் அணியினரிடையே தொற்றியது. இதனையடுத்து களத்தில் இருந்த ஹர்லீன் டியோல் (Harleen Deol) - தேந்திரா தோட்டின் ஆகியோர் நின்று ஆடினார். இதனால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இருவரும் 31 பந்துகளில் 32 ரன்கள், 6 பந்துகளில் 7 ரன்கள் என நின்று ஆடினர். கஷ்வீ கெளதம் (Kashvee Gautam) 15 பணத்துக்களில் 20 ரன்கள் அடித்து அவுட்டாகினார். இன்று மும்பை அணியின் பந்துவீச்சு மிகப்பிரம்மதமாக அமைந்ததால், குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்து 120 ரன்கள் எடுத்து. இதனால் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி (Mumbai Indians WPL T20 2025) களமிறங்கவுள்ளது. பல இடங்களில் மும்மை அணி கேட்ச் விட்டிருந்தாலும், பீல்டிக் மாஸாக இருந்தது.

கஷ்வீ கெளதம் அசத்தல் பேட்டிங்:

துவண்டுகிடந்த அணியை தூக்கி நிமிர்த்திய ஹர்லீன் - கஷ்வீ (Harleen Deol - Kashvee Gautam):

பந்துவீச்சில் அசத்திய மும்பை அணியால், திணறிய குஜராத்: