ஜனவரி 14, மும்பை (Mumbai): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மகேந்திரா (Mahindra) குழுமத்தின் தலைவராக ஆனந்த் மகேந்திரா (Anand Mahindra) இருக்கிறார். இந்திய ஆட்டோ மொபைல், தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் முதலீடுகளை செய்து, உலகளவில் அடையாளம் பெற்றுள்ள நிறுவனம் சமீபத்தில் ஏஐ தொழில்நுட்பத்துடன் கொண்ட மகேந்திரா எக்ஸ்இவி 9இ & பிஇ 6இ (Mahindra XEV9 & BE 6e) ரக கார்களை அறிமுகம் செய்தது. 2024ம் ஆண்டின் சிறந்த காராக மகேந்திராவின் தார் ரோக்ஸ் (Thar ROXX) தேர்வு செய்யப்பட்டது. Mahindra Electric Origin SUVs: உலகத்தரத்தில் தயாராகி, சாலைகளில் களமிறங்கும் மகேந்திரா எலக்ட்ரிக் கார்; கொடியசைத்து தொடக்கி வைத்த தமிழ்நாடு முதல்வர்.!
ஆனந்த் மகேந்திரா (Anand Mahindra Pongal Wish) பொங்கல் வாழ்த்து:
இந்நிலையில், ஜனவரி 14, 2025 இன்று தைப்பொங்கல் பண்டிகை சிறப்பிக்கப்படுகிறது. தமிழர்களின் அறுவடைத் திருநாளான இன்று, தமிழர்கள் தங்களின் வீடுகளில் பொங்கல் வைத்து உழவுக்கு உறுதுணையாக இருக்கும் கதிரவனுக்கு நன்றி தெரிவிப்பார்கள். இதனை முன்னிட்டு உலகத்தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திராவும், தனது பொங்கல் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவரின் எக்ஸ் வலைப்பக்கத்தில், "உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!" என தெரிவிக்கப்பட்டுள்ளது. Pongal 2025: தித்திக்கும் தைப்பொங்கல், களைகட்டும் மாட்டுப்பொங்கல், பாசத்துடன் காணும் பொங்கல்... வாழ்த்துச் செய்தி இதோ..!
ஆனந்த் மகேந்திரா தனது பிரைமரி பள்ளி வரையிலான வகுப்புகளை, நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி (Ooty), லவ்டேலில் இருக்கும் லாரன்ஸ் பள்ளியில் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. Mahindra Electric Origin SUVs: உலகத்தரத்தில் தயாராகி, சாலைகளில் களமிறங்கும் மகேந்திரா எலக்ட்ரிக் கார்; கொடியசைத்து தொடக்கி வைத்த தமிழ்நாடு முதல்வர்.!
பொங்கல் வாழ்த்து தொடர்பாக, ஆனந்த் மகேந்திராவின் எக்ஸ் வலைப்பதிவு:
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்! pic.twitter.com/5LFVxXVB4u
— anand mahindra (@anandmahindra) January 14, 2025