Wrestlers Satyawart Kadian & Sakshi Malik (Photo Credit PTI)

ஜூன் 17, புதுடெல்லி (Wrestlers Protest): ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் மற்றும் சத்யவர்த் காடியன் ஆகியோர் தங்கள் போராட்டம் அரசியல் உள்நோக்கம் இல்லை என்று வலியுறுத்தியுள்ளனர்.

இந்திய நாட்டிற்காக ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற சாக்ஷி மாலிக், வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா உள்ளிட்ட நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றசாட்டை முன்வைத்தனர்.

இந்த விஷயம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, வீரர்களின் குற்றச்சாட்டுக்கு அரசு செவிசாய்க்காததால் காங்கிரஸின் பிரியங்கா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் போராட்ட இடத்திற்குச் சென்று, மே 28 அன்று ஜந்தர் மந்தரில் இருந்து மல்யுத்த வீரர்களை அகற்றுவதற்கு முன்பு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். Watching TV During Sleeping: டிவி பார்த்தபடி உறங்கும் பழக்கத்தை கொண்டவரா நீங்கள்?.. அதிர்ச்சி தகவல் உங்களுக்குத்தான்.. புற்றுநோய் அபாயமாம்..! 

மல்யுத்த வீரர்களின் போராட்டம் என்பது தொடர்ந்து வந்தாலும், அரசுத்தரப்பில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் போராட்டக்குழுவினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. டெல்லி காவல்துறை விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சாக்ஷி மாலிக் மற்றும் சத்யவர்ட் காடியன் ஆகியோர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில், "எங்கள் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல. நாங்கள் கடந்த ஜனவரி மாதம் ஜந்தர் மந்தருக்கு போராட்டம் செய்ய வந்தோம். கடந்த 12 ஆண்டுகளாக மல்யுத்த வீரர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் துயரம் நடந்து வந்துள்ளது. அவரவர் எதிர்காலம் கருதி அனைவரும் அமைதியாக இருந்துவிட்டார்கள்.

எங்களின் போராட்டம் என்பது WFI-க்கு (Wrestlers Federation India) எதிரானது, அரசுக்கு எதிரானது இல்லை. பல மல்யுத்த வீரர்களும் ஒன்று படாததன் காரணமாக பல ஆண்டுகளாக அமைதியாக இருந்துவிட்டார்கள். சிறுமி எங்களுக்கு கொடுக்கப்பட்ட ஆதரவை திரும்ப பெற்றதற்கு காரணம், அவர்களின் குடும்பம் மிரட்டப்பட்டுள்ளது. அவர்கள் ஏழைக்குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். அவர்களால் சக்திவாய்ந்த மனிதரை எதிர்க்க இயலாது" என வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.