Ravindra Jadeja Wicket | IND Vs NZ | 02 March 2025 (Photo Credit: @IPLCricketMatch / @the_sports_x X)

மார்ச் 02, துபாய் (Sports News): ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில், குரூப் ஏ பிரிவில் முதலிடத்தில் யார்? என்ற கேள்வியுடன் இன்று இந்தியா - நியூசிலாந்து அணிகள் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்து, 50 ஓவர்களில் 249 ரன்கள் குவித்துள்ளது. இதனால் 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கி இருக்கிறது. IND Vs NZ: 9 விக்கெட் இழப்புக்கு இந்தியா 249 ரன்கள் குவிப்பு.. அசத்திய எஸ்.ஐயர், பாண்டியா.. கிளன் அசத்தல் பீல்டிங்.! 

ரவீந்திர ஜடேஜாவின் விக்கெட்:

இந்நிலையில், போட்டியில் நின்று ஆடிக்கொண்டு இருந்த ரவீந்திர ஜடேஜா, தனது 16 வது பந்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். மேத் ஹென்றி (Matt Henry)-யின் பந்தில், 45.5 வது ஓவரில், 16 வது பந்தை எதிர்கொண்ட ரவீந்திர ஜடேஜா, கேன் வில்லியம்சனிடம் (Kane Williamson) கேட்ச் கொடுத்து வெளியேறினார். ரவிந்திர ஜடேஜா இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 20 பந்துகளில் 16 ரன்கள் அடித்து அவர் வெளியேறினார்.

விராட் கோலி விக்கெட் தொடர்பாக ஜடேஜா பேசும் காணொளி:

ஜடேஜா விக்கெட் காலி: