ஏப்ரல் 16, பெங்களூர் (Sports News): ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மார்ச் 22ம் தேதி சென்னையில் தொடங்கிய போட்டி, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் நடைபெறும் போட்டியின் சுவாரசியத்தை ரிக்கெட் ரசிகர்கள் நேரடியாக மைதானத்திற்கு சென்றும், ஜியோ சினிமா (Jio Cinema) செயலி வாயிலாக நேரலையில் கண்டு ரசித்து வருகின்றனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை பொறுத்தமட்டில், பாபிடூப்ளசிஸ் வழிநடத்தும் அணியில் விராட் கோலி (Virat Kohli), கிளன் மேக்ஸ்வெல் (Glenn Maxwell), ரஜத் படிதார், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், வில் ஜேக்ஸ், சவுரவ் சவுகான், மகபால் லொம்ரோர், விஜயகுமார் வைஷ்க், ஸ்வப்னில் சிங், முகம்மத் சிராஜ், கரண் சர்மா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இவர்களில் கிளன் மேக்ஸ்வெல் திறம்பட தனது செயல்பாடுகளை வெளிப்படுத்தும் வீரர் ஆவார். ஆனால், சமீபகாலமாக அவரின் ஆட்டம் நிலையின்றி போனது. Virat Kohli Anger Moment: அணியின் மோசமான பந்துவீச்சால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற விராட் கோலி; வரலாறு படைத்த ஹைதராபாத்.!
உடல்-மன பிரச்சனைகளால் முடிவு என மேக்ஸ்வெல் அறிவிப்பு: நேற்று (15 ஏப்ரல் 2024) பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் வைத்து நடைபெற்ற எஸ்ஆர்எச் - ஆர்சிபி (SRH Vs RCB) அணிகளுக்கு இடையேயான ஆட்டத்திலும் பெங்களூர் அணி தோல்வியை தழுவியது. இதற்கு அணியின் ஒட்டுமொத்த செயல்பாடு காரணமாக கவனிக்கப்பட்டது. இந்நிலையில், அணியில் இடம்பெற்ற நட்சத்திர ஆட்டக்காரர் கிளன் மேக்ஸ்வெல், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக தெரிவித்துள்ளார். எனக்கு மன ரீதியாக ஏமாற்றும் உடல்ரீதியாக ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் காரணமாக நான் இம்முடிவை எடுக்கிறேன். எனது முடிவு பிற வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும். நான் முழுவதுமாக பழைய பாணியில் தயாரானதும் கட்டாயம் நல்ல ஒரு பங்களிப்பை வெளிப்படுத்த இயலும். ஆர்.சி.பி நிர்வாகம் திறம்பட செயல்படுகிறது. கட்டாயம் நான் உடற்தகுதி பெற்ற பின்னர் அணிக்காக மீண்டும் விளையாடுவேன் என கூறியுள்ளார். இது நடப்பு தொடரில் இருந்து அவர் விலகுவதை உறுதி செய்து, ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.