
மார்ச் 17, சென்னை (Sports News): 2025ம் ஆண்டுக்கான 18 வது டாடா இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல் (18th TATA IPL Premier League 2025) போட்டிகள், மார்ச் மாதம் 22, 2025 முதல் தொடங்கி, மே மாதம் 25, 2025 வரை நடைபெறுகிறது. இந்திய அளவில் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings), டெல்லி கேபிட்டல்ஸ் (Delhi Capitals), குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders), லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் (Lucknow Super Giants), மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians), பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings), ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bengaluru), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) ஆகிய அணிகள் மோதுகின்றன. Virat Kohli: "ஈ சாலா கப் நம்தே" - ஆர்சிபி அணியில் இணைந்த விராட் கோலி.. வீடியோ இதோ.!
சாம் கரண் அணியில் இணைந்தார்:
இந்நிலையில், ஐபிஎல் தொடர்களில் 5 கோப்பையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் முன்னணி பெற்றுள்ளன. சென்னை அணி 5 முறை இறுதிப்போட்டி வரை வந்து வெற்றிவாய்ப்பை தவறவிட்டது. 2025 ஐபிஎல் போட்டியில் வெற்றிபெற வேண்டி அணியினர் தொடர்ந்து பயிற்சி எடுத்து வருகின்றனர். அணியின் முக்கிய வீரர்களான எம்.எஸ் தோனி, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முன்னதாகவே சென்னை வந்து இருந்தனர். அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் எனவும், சுட்டிக்குழந்தை என பலரால் வரவேற்கப்படும் சாம் கரண் (Sam Curran), சென்னை அணியில் இணைந்து பயிற்சியை தொடங்கி இருக்கிறார். இந்த வீடியோ சிஎஸ்கே நிர்வாகம் தர்பாரில் வெளியிடப்பட்டுள்ளது.
சாம் கரண் சென்னை அணியில் இணைந்தார்:
He returns as SUPER SAM! 🦁💥 #WhistlePodu #Dencoming 💛 @CurranSM pic.twitter.com/KfI7PpqXDy
— Chennai Super Kings (@ChennaiIPL) March 16, 2025