Virat Kohli | IPL 2025 (Photo Credit: @RCBTweets X)

மார்ச் 15, பெங்களூர் (Cricket News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டிகள், வரும் 22 மார்ச் 2025 அன்று முதல் தொடங்கவிருக்கிறது. இந்திய அளவிலான கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League 2025) போட்டியில், 10 அணிகள் சுமார் 89 போட்டிகளில் மோதிக்கொள்ளும். மார்ச் 22, 2025 முதல் தொடங்கி நடைபெறும் ஆட்டம், மே 25, 2025 வரையில் நடைபெறுகிறது. ஒரு நாள் ஒன்றுக்கு ஒரு ஆட்டம் வீதமும், வார இறுதியில் இரண்டு ஆட்டம் வீதமும் போட்டிகள் நடைபெறும். அந்த வகையில், 18 வது ஐபிஎல் போட்டியில், பெங்களூர் அணியின் கேப்டனாக ரஜத் படிதார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். DC Vs MI WPL 2025 Final: பெண்கள் பிரீமியர் லீக் 2025: இறுதிப்போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்.. போட்டி எங்கே? நேரலை பார்ப்பது எப்படி?.. விபரம் இதோ.! 

பெங்களூர் வந்த விராட் கோலி:

இதுவரை ஐபிஎல் போட்டியில் ஒரு வெற்றிக்கோப்பையை கூட ஏந்தாத பெங்களூர் அணி 3 முறை இறுதி போட்டி வரை சென்று தோல்வியை தழுவி இருக்கிறது. சுமார் நான்குக்கும் மேற்பட்ட முறை அரையிறுதி தகுதிச்சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறி இருக்கிறது. 2025ம் ஆண்டில் பெங்களூர் அணியின் பெண்கள் பிரிவும் அதிர்ச்சியுறும் தோல்வி அடைந்தது. இதனால் ஆண்கள் அணியாவது ஐபிஎல் கோப்பையை கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், இன்று பெங்களூர் அணியின் வெற்றிக்காக தனது பயிற்சியை விராட் கோலி தொடங்கி இருக்கிறார். அவர் அணியில் இணைந்ததை உறுதி செய்யும் வகையில் வீடியோ ஒன்றும் ஆர்சிபி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

விராட்கோலி பெங்களூர் அணியின் அதிகாரபூர்வமாக இணைந்த காணொளி: