
பிப்ரவரி 10, தலைமை செயலகம் (Chennai News): 19 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர், மலேஷியாவில் நடைபெற்ற ஐசிசி யு19 மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றனர். வெற்றிவாகை சூடிய இந்திய மகளிர் யு19 கிரிக்கெட் அணியின் வீராங்கனைகளுக்கு ரூ.5 கோடி பரிசாக வழங்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணியில், ஆல்ரவுண்டரான தமிழ்நாட்டைச் சேர்ந்த கமலினி (Kamalini G) இடம்பெற்று இருந்தார். IND Vs ENG 3rd ODI: இந்தியா - இங்கிலாந்து மூன்றாவது ஒருநாள் போட்டி: நேரலையில் பார்ப்பது எப்படி? விபரம் உள்ளே.!
ரூ.25 இலட்சம் பரிசு:
கமலினியின் செயல் இந்திய அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய உதவியை செய்தது. இதனால் அவரை ஊக்கப்படுத்தும் பொருட்டும், மகளிர் கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு பாராட்டுகளை தெரிவிக்கும் விதமாகவும், தமிழ்நாடு அரசு ரூ.25 இலட்சம் காசோலையை கமலினிக்கு இன்று வழங்கியது. கமலினி சார்பில், அவர்களின் பெற்றோர் காசோலையை பெற்றுக்கொண்டனர்.
கமலினிக்கு பரிசு வழங்கிய தமிழ்நாடு அரசு:
மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள், மகளிருக்கான T20 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு துணைபுரிந்த தமிழ்நாட்டு வீராங்கனை செல்வி கு.கமலினி அவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 25 இலட்சம் ரூபாய்க்கான காசோலை அவரது பெற்றோரிடம் வழங்கினார். pic.twitter.com/Q0jUyGmx9C
— TN DIPR (@TNDIPRNEWS) February 10, 2025