CSK Vs RR | IPL 2025 (Photo Credit: @IPL X)

ஏப்ரல் 11, சேப்பாக்கம் (Cricket News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) கிரிக்கெட் தொடரில், நேற்று பெங்களூரில் நடைபெற்ற ஆர்சிபி - டிசி அணிகளுக்கு இடையேயான போட்டியில், டெல்லி அணி வெற்றிபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சொந்த மண்ணில் தோல்வி அடைந்தது. அதனைத்தொடர்ந்து இன்று சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், இரவு 07:30 மணியளவில் சென்னை சூப்பர் கிங்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Chennai Super Kings Vs Kolkata Knight Riders IPL 2025) அணிகள் மோதும் ஆட்டம் நடைபெறுகிறது. RCB Vs DC: ஐபிஎல் 2025: பெங்களூர் Vs டெல்லி அணிகள் இன்று மோதல்.. மேட்ச் அப்டேட் இதோ.! 

சூப்பர் கிங்ஸ் எதிர் நைட் ரைடர்ஸ் (Super Kings Vs Knight Riders):

இன்று நடைபெறும் ஆட்டத்தை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar) செயலி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். தொடர் தோல்வியுடன் நடப்பு சீஸனின் புள்ளிப்பட்டியலில் 9 வது இடத்தில் இருக்கும் சென்னை அணி தோல்வியில் இருந்து மீளுமா? கொல்கத்தா அணி தனது வெற்றியை தக்க வைத்துக்கொள்ளுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.