மார்ச் 31, மும்பை (Sports News): இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில், இன்று மும்பை - கொல்கத்தா (MI Vs KKR IPL 2025) அணிகள் மோதியது. ஆட்டத்தின் முதல் பாதியில் பந்துவீசிய மும்பை, தனது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தியது. இதனால் 16.2 ஓவரில் 10 விக்கெட் இழந்த கொல்கத்தா அணி, 116 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 117 ரன்கள் என்ற இலக்குடன் மும்பை களமிறங்கி இருக்கிறது. இந்த போட்டியில் மும்பை அணியின் சார்பில், அறிமுக வீரராக களமிறக்கப்பட்ட அஸ்வனி குமார் (Ashwani Kumar), சுமார் 4 விக்கெட் எடுத்து அசத்தினார். அவரின் 4 விக்கெட்டும் முக்கிய விக்கெட்டுகள் என்பதால், கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டுள்ளது. MI Vs KKR: 16 ஓவரில் சுருண்ட கொல்கத்தா.. அஸ்வினி குமார் அசத்தல் பந்துவீச்சு.. மும்பைக்கு 117 ரன்கள் இலக்கு.!
யார் இந்த அஸ்வனி குமார் (Ashwani Kumar IPL 2025):
ஐபிஎல் ஏலத்தின்போது பஞ்சாப் அணியின் வசம் இருந்த அஸ்வனி, ரூ.30 இலட்சம் தொகைக்கு எடுக்கப்பட்டார். இன்றைய போட்டியில் மும்பை அணியின் சார்பில் களமிறக்கப்பட்ட அஸ்வனி, குயின்டன் டி காக், அஜிங்கிய ரஹானே, மனிஷ் பாண்டே, ஆன்ட்ரே ரூஷல் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் இன்று அவர் மும்பை அணியின் சநட்சத்திர ஆட்டக்காரராகவும் கவனிக்கப்பட்டார். இந்த விக்கெட்டுகள் வாயிலாக, மும்பை அணியின் அறிமுக விளையாட்டிலேயே, முதல் பதில் விக்கெட் எடுத்த 10 வது பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அவர் அடைகிறார். 23 வயதாகும் வேகப்பந்து வீச்சாளரான அஸ்வனி குமார், பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்தார். அதனைதொடர்ந்த்து, மும்பை அணியில் களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த 2022ல் சையத் முஷ்டாக் அலி டிராபி போட்டியில், பஞ்சாப் அணியின் சார்பில் டி20 போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டார். பின் அவரின் அறிமுகம் மற்றும் செயல்பாடுகள் காரணமாக, இன்று இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.