மார்ச் 31, மும்பை (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், இன்று 12 வது ஆட்டம் நடைபெற்று வருகிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Mumbai Indians Vs Kolkata Knight Riders) அணிகள் மோதுகிறது. போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. CSK Vs RR Highlights: சென்னை ரசிகர்களுக்கு ஷாக்.. தொடர்ந்து இரண்டாவது தோல்வி.. ராஜஸ்தான் திரில் வெற்றி.!
மும்பை Vs கொல்கத்தா (MI Vs KKR IPL 2025):
கொல்கத்தா அணியின் சார்பில் களமிறங்கிய அஜிங்கிய ரஹானே 7 பந்துகளில் 11 ரன்கள், ஆங்கிரிஷ் 16 பந்துகளில் 26 ரன்கள், ரிங்கு சிங்க் 14 பந்துகளில் 17 ரன்கள், மனிஷ் பாண்டே 14 பந்துகளில் 19 ரன்கள் அதிகபட்சமாக எடுத்திருந்தனர். எஞ்சிய வீரர்கள் குயின்டன் டி காக், சுனில் நரேன், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷித் ராணா ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில் களத்தில் இருந்த ஸ்பென்சர் மற்றும் ரமன்தீப் ஜோடி நின்று ஆடி அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தியது. 16.2 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழந்த கொல்கத்தா அணி 116 ரன்கள் எடுத்தது. இதனால் 117 எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் மும்பை அணி களமிறங்குகிறது. முதல் 7 ஓவர்களுக்குள் 5 விக்கெட் இழந்த கொல்கத்தா, 16 ஓவர்கள் மொத்த விக்கெட்டையும் இழந்தது. மும்பை அணியின் சார்பில் பந்துவீசியவர்களில் அஸ்வனி குமார் (Ashwani Kumar) 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தீபக் சாகர் 2 விக்கெட், போல்ட், ஹர்திக், விக்னேஷ், மிட்செல் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு:
🚨 Toss 🚨@mipaltan elected to field against @KKRiders
Updates▶️ https://t.co/iEwchzEpDk#TATAIPL | #MIvKKR pic.twitter.com/VqHjlTKB7o
— IndianPremierLeague (@IPL) March 31, 2025
ஓப்பனிங் பேட்டரிகளை தெரிவிக்கவிட்ட மும்பை:
#MI's Opening Bowlers 🆚 #KKR's Opening Batters
And it's the @mipaltan's bowlers who win the opening act 💙#KKR 25/2 after 3 overs.
Updates ▶ https://t.co/iEwchzEpDk#TATAIPL | #MIvKKR pic.twitter.com/eoundLJeE5
— IndianPremierLeague (@IPL) March 31, 2025
அஸ்வினி குமார் அசத்தல்:
Debut straight out of a storybook 📖
The perfect first chapter for Ashwani Kumar 👌👌
Updates ▶ https://t.co/iEwchzDRNM#TATAIPL | #MIvKKR | @mipaltan pic.twitter.com/npaynbIViX
— IndianPremierLeague (@IPL) March 31, 2025