Quinton de Kock Wicket (Photo Credit: @stephanisymonds / @TheRcbZone X)

மார்ச் 22, கொல்கத்தா (Sports News): டாடா இந்தியன் பிரீமியர் லீக் 2025 (Indian Premier League 2025) போட்டியில், முதல் ஆட்டம் இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சஸ் பெங்களூர் (Kolkata Knight Riders Vs Royal Challengers Bangalore) அணிகள் மோதுகின்றன. கேகேஆர் - ஆர்சிபி (KKR Vs RCB) அணிகள் மோதும் ஆட்டம், இன்று மாலை 07:30 மணியளவில் தொடங்கி நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) பக்கத்தில் நேரலையில் பார்க்கலாம். KKR Vs RCB Toss Update: இந்தியன் பிரீமியர் லீக் 2025: பெங்களூர் அணி டாஸ் வென்று பௌலிங் தேர்வு.! 

குயின்டன் டி காக் விக்கெட் இழப்பு:

இந்நிலையில், கொல்கத்தா அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் குயின்டன் டி காக் (Quinton de Kock), 4 பந்துகளில் ஒரேயொரு பவுண்டரி அடித்து அவுட் ஆகி வெளியேறினார். 0.5 வது பந்தில், ஜோஷின் பந்துவீச்சில், ஜிதேஷ் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறி இருந்தார். அவர் அதிரடியாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த சில நொடியிலேயே விக்கெட் இழந்து வெளியேறினார். இந்த விக்கெட் ஐபிஎல் 2025 ன் முதல் விக்கெட் ஆகும். முதல் பவுண்டரியை நடப்பு சீசனில் அடித்து அதிரடியை தொடங்கி வைத்த காக், அடுத்த நிமிடமே வெளியேறினார்.

2025 முதல் விக்கெட் எடுத்த (IPL 2025 First Wicket) ஜோஸ் ஹெஜில்வுட் (Josh Hazlewood):

டி. காக் விக்கெட் பறிபோன காட்சி: