IPL 2025: Toss Update | Match 1: KKR Vs RCB (Photo Credit: @IPL X)

மார்ச் 22, கொல்கத்தா (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், முதல் ஆட்டம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் (Kolkata Knight Riders Vs Royal Challengers Bangalore) இடையே இன்று (22 மார்ச் 2025), கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்குகிறது. ஐபிஎல் 2025 போட்டியின் முதல் ஆட்டம் (IPL 2025 First Match) என்பதால், பல கண்கவர் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் (Eden Gardens Stadium) கிரிக்கெட் மைதானத்தில் வைத்து ஆட்டம் தொடங்குகிறது. இரவு 07:30 மணிக்கு இரண்டு அணிகளும் மோதிக்கொள்கின்றன. KKR Vs RCB: ஐபிஎல் 2025 போட்டி: கொல்கத்தா - பெங்களூர் அணிகள் மோதல்.. நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.! 

பெங்களூர் அணி பௌலிங்:

இந்நிலையில், பெங்களூர் அணியின் கேப்டன் ரஜத் படிதார் டாஸ் சுழட்சி ஹெட்ஸ் தேர்வு செய்த நிலையில், அவர் டாஸ் வென்றார். தொடர்ந்து அவர் பெங்களூர் அணி முதலில் பௌலிங் செய்கிறது என கூறியதால், பெங்களூர் அணி முதலில் பந்துவீசுகிறது. இதனால் கொல்கத்தா அணி பேட்டிங் தயாராகிறது. இன்றைய போட்டியில் ஆர்சிபி அணியின் சார்பில் பி. சால்ட், வி. கோஹ்லி, ஆர். படிதார், எல். லிவிங்ஸ்டோன், ஜே. ஷர்மா, டி. டேவிட், கே. பாண்டியா, ஆர். டார், ஜே. ஹேசில்வுட், ஒய். தயாள், எஸ். ஷர்மா ஆகியோர் விளையாடுகின்றனர். கேகேஆர் அணியின் சார்பில் எஸ். நரைன், கே. டிகாக், ரஹானே, வி. ஐயர், ரகுவன்ஷி, ஆர். சிங், ரஸ்ஸல், ஆர். சிங், எஸ். ஜான்சன், எச். ராணா, வி. சக்கரவர்த்தி ஆகியோர் விளையாடுகின்றனர்.

டாஸ் அப்டேட் இதோ: