
மார்ச் 21, கொல்கத்தா (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், முதல் ஆட்டம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையே நாளை (22 மார்ச் 2025), கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்குகிறது. ஐபிஎல் 2025 போட்டியின் முதல் ஆட்டம் (IPL 2025 First Match) என்பதால், பாடகர் கரண் ஆஜ்லா (Karan Aujla), ஸ்ரேயா கோஷல் (Shreya Ghoshal), திஷா பாதணி (Disha Patani) நடனம் உட்பட பல கண்கவர் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் (Eden Gardens Stadium) கிரிக்கெட் மைதானத்தில் வைத்து ஆட்டம் தொடங்குகிறது. இரவு 07:30 மணிக்கு இரண்டு அணிகளும் மோதிக்கொள்கின்றன. நாளை மாலை 05:30 மணிக்கு மேல் கொண்டாட்டங்களுடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.
கோவையில் நேரலைக்கு ஏற்பாடு:
அதேபோல, ஐபிஎல் 2025 (IPL 2025) போட்டியை நேரலையில் மக்கள் கண்டுகளிக்கும் வகையில், சுமார் 50 நகரங்களில் உள்ள பூங்கா போன்ற இடங்களில் மக்கள் பாதுகாப்பாக போட்டியை காண நேரலை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திரைப்படங்களை போல மிகப்பெரிய திரையில் குடும்பம், குடும்பமாக போட்டியை காண பொழுதுபோக்கு மையத்துடன் இணைந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. முதற்கட்டமாக 50 இடங்களில் ஒவ்வொரு வார இறுதியிலும் போட்டியை நேரலையில் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் முதல் இரண்டு ஆட்டங்களை, கோவையில் உள்ள ஐபிஎல் பூங்கா-வில் நேரலையில் கண்டுகளிக்கலாம். KKR Vs RCB: இந்தியன் பிரீமியர் லீக் 2025; முதல் ஆட்டத்தில் கொல்கத்தா - பெங்களூர் அணிகள் மோதல்.. எங்கு? எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் உள்ளே.!
கேகேஆர் அணி வீரர்கள் (KKR Squad):
அஜின்கிய ரஹானே (Ajinkya Rahane) வழிநடத்தும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் (Kolkata Knight Riders Squad 2025) ரிங்கு சிங் (Rinku Singh), மனிஷ் பாண்டே (Manish Pandey), ரோவ்மன் போவெல் (Rovman Powell), ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி (Angkrish Raghuvanshi), லுவனித் சிசோடியா (Luvnith Sisodia), குயின்டன் டி காக் (Quinton De Kock), ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் (Rahmanullah Gurbaz), ஆன்ரி ரூசெல் (Andre Russell), சுனில் நரானே (Sunil Narine), அனுகூல் ராய் (Anukul Roy), மொயீன் அலி (Moeen Ali), வெங்கடேஷ் ஐயர் (Venkatesh Iyer), ராமந்தீப் சிங் (Ramandeep Singh), ஹர்ஷித் ராணா (Harshit Rana), வருண் சக்கரவர்த்தி (Varun Chakaravarthy), அன்ரிச் நோர்ட்ஜெ (Anrich Nortje), ஸ்பென்சர் ஜான்சன் (Spencer Johnson), வைபவ் அரோரா (Vaibhav Arora), சேட்டன் சங்கரியா (Chetan Sankariya), மயங்க் மார்கண்டே (Mayank Markande) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பெங்களூர் அணி வீரர்கள் (RCB Squad):
ரஜத் படிதார் (Rajat Patidar) வழிநடத்தும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் (Royal Challengers Bangalore Squad 2025) லியாம் லிவிங்ஸ்டன் (Liam Livingstone), விராட் கோலி (Virat Kohli), தேவ்தத் படிக்கல் (Devdutt Padikkal), ஸ்வஸ்திக் சிகாரா (Swastik Chhikara), ஜிதேஷ் சர்மா (Jitesh Sharma), பில் சால்ட் (Phil Salt), ஸ்வப்னில் சிங் (Swapnil Singh), மனோஜ் பாண்ட்ஜ் (Manoj Bhandage), குர்னால் பாண்டியா (Krunal Pandya), டிம் டேவிட் (Tim David), ஜேக்கப் பெத்தெல் (Jacob Bethell), புவனேஸ்வர் குமார் (Bhvneshwar Kumar), ரசிஹ் ஸலாம் (Rasikh Salam), சுயாஸ் சர்மா (Suyash Sharma), மோஹித் ராதே (Mohit Rathee), அபிநந்தன் சிங் (Abhiandan Singh), ஜோஷ் ஹஸ்ட்லேவுட் (Josh Hazlewood), ரோமரியோ ஷெப்பர்ட் (Romario Shepherd), நுவான் துஷாரா (Nuwan Thushara), யாஷ் தயால் (Yash Dayal), லுங்கி நெகிடி (Lungi Ngidi) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
10 அணிகளின் கேப்டன்கள், அனைவர்க்கும் ஒரே இலக்கு:
🔟 captains, 🔟 mindsets, 1️⃣ 🏆
Each leader brings a unique strategy, but only one will win the #TATAIPL 2025 title 🤩 pic.twitter.com/Y7yZOa1Dxr
— IndianPremierLeague (@IPL) March 21, 2025
50 இடங்களில் போட்டியை பொதுஇடங்களில் நேரலையில் கண்டுகளிக்க ஏற்பாடு:
Feel the thrill, vibes, and endless fun 🥳
Presenting the host cities for #TATAIPL Fan Park 2025! 🤩
Which location will you be enjoying the experience from? 🤔 pic.twitter.com/cpEpWWmNOK
— IndianPremierLeague (@IPL) March 21, 2025