
மார்ச் 22, கொல்கத்தா (Sports News): டாடா இந்தியன் பிரீமியர் லீக் 2025 (Indian Premier League 2025) போட்டியில், முதல் ஆட்டம் இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சஸ் பெங்களூர் (Kolkata Knight Riders Vs Royal Challengers Bangalore) அணிகள் மோதுகின்றன. கேகேஆர் - ஆர்சிபி (KKR Vs RCB) அணிகள் மோதும் ஆட்டம், இன்று மாலை 07:30 மணியளவில் தொடங்கி நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) பக்கத்தில் நேரலையில் பார்க்கலாம். KKR Vs RCB: ஓப்பனிங்கே மரணமாஸ்.. சுனில் & அஜிங்கிய ரஹானே வெறியாட்டம்.. பெங்களூர் அணிக்கு 175 ரன்கள் இலக்கு.!
கொல்கத்தா அணி 174 ரன்கள் குவிப்பு:
டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் ரஜத் பௌலிங் தேர்வு செய்தார். இதனால் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. முதல் 3 ஓவர்கள் ஆட்டம் பெங்களூர் கையில் இருந்தாலும், பின் கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே, சுனில் ஆகியோரின் அதிரடி ஆட்டம், ரன்கள் குவிப்புக்கு வழிவகை செய்தது. கொல்கத்தா அணியின் சார்பில் விளையாடியவர்களில் குயின்டன் காக் 5 பந்துகளில் 4 ரன்கள், சுனில் நரின் 26 பந்துகளில் 44 ரன்கள், அஜிங்கிய ரஹானே 31 பந்துகளில் 56 ரன்கள், வெங்கடேஷ் ஐயர் 7 பந்துகளில் 6 ரன்கள் அடித்தனர். ரிங்கு சிங் 10 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். அக்ரிஸ் சூர்யவன்ஷி 22 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் கொல்கத்தா அணி எடுத்தது. இதனால் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கவுள்ளது. பந்துவீச்சை பொறுத்தவரையில் பெங்களூர் அணியின் சார்பில் விளையாடியவர்களில் குர்னால் பாண்டியா 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். ஜோஸ் 2 விக்கெட், ரஷீத், சுயாஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றி இருந்தனர். 56 வது அரைசதம் அடித்து விளாசிய விராட் கோலி, இன்று தனது 400 வது டி20 போட்டியில் விளையாடி அசத்தினார். கொல்கத்தா அணியின் ரன்கள் குவிப்புக்கு சுனில், அஜிந்திய ரஹானே பாடுபட்டதுபோல, பெங்களூர் அணியின் வெற்றிக்காக விராட் அசத்தல் பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தார். Ajinkya Rahane: ருத்ரதாண்டவம்.. அடித்து நொறுக்கிய அஜிந்திய ரஹானே.. மைதானத்தில் சிக்ஸ், பவுண்டரி மழை..!

பெங்களூர் அணி அசத்தல் வெற்றி:
பெங்களூர் அணியின் சார்பில் களமிறங்கிய வீரர்களில் பில் சால்ட் (Phil Salt) 31 பந்துகளில் 56 ரன்கள், படிக்கல் 10 பந்துகளில் 10 ரன்கள், படிதார் 16 பந்துகளில் 34 ரன்கள் அடித்து அசத்தி இருந்தனர். விராட் கோலி 36 பந்துகளில் 59 ரன்கள் அடித்து அவுட் ஆகாமல் இருந்தார். லியாம் லிவிங்ஸ்டன் 4 பந்துகளில் 11 ரன்கள் அடித்தார். ஆட்டத்தின் முடிவில் 16.2 ஓவர்களில் பெங்களூர் அணி 177 ரன்கள் அடித்து வெற்றி அடைந்தது. பாலிவுட் திரைஉலகில் கிங் கான் என வருணிக்கப்படும் ஷாருக்கானுக்கு சொந்தமான அணியை, கிரிக்கெட் உலகில் கிங் என வருணிக்கப்படும் விராட்கோலி அதிரடியாக ஆடி, பெங்களூர் அணியின் வெற்றிக்கு வழிவகை செய்தார்.
ஐந்தெழுத்து மந்திரம் விராட் (VIRAT) என சொல்லுங்கள்:
CLASS has 5 letters, and so does VIRAT! 😎
What a shot, what a celebration! 👑
Watch LIVE action: https://t.co/iB1oqMusYv #IPLonJioStar 👉 #KKRvRCB, LIVE NOW on Star Sports Network & JioHotstar! pic.twitter.com/OquglYLJF4
— Star Sports (@StarSportsIndia) March 22, 2025
பில் சால்ட் & விராட் கோலி ஜோடியின் அதிரடி ஆட்டம்:
Phil aur Virat ke six aur four 🏏💥
RCB fans ka super-loud shor! 🔊📣
What a start from RCB! 👏❤️
Watch LIVE action: https://t.co/iB1oqMusYv #IPLonJioStar 👉 KKR 🆚 RCB, LIVE NOW on Star Sports Network & JioHotstar! pic.twitter.com/urpQxbHf27
— Star Sports (@StarSportsIndia) March 22, 2025
கிங் கோலியின் அசத்தல் ஆட்டம்:
The iconic Virat Kohli goes down the ground 😎
Sit back and enjoy his exquisite stroke play 🎁🍿@RCBTweets race away to 80/0 after 6 overs.
Updates ▶ https://t.co/C9xIFpQDTn#TATAIPL | #KKRvRCB | @imVkohli pic.twitter.com/w4imLyZgbA
— IndianPremierLeague (@IPL) March 22, 2025