Match 12: IPL 2025 | KKR Vs MI (Photo Credit: @IPL X)

மார்ச் 31, மும்பை (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், இன்று 12 வது ஆட்டம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Mumbai Indians Vs Kolkata Knight Riders) அணிகள் மோதிய ஆட்டத்தில், டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் பாதியில் 16.2 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழந்த கொல்கத்தா அணி 116 ரன்கள் எடுத்தது. மும்பை அணியின் சார்பில் பந்துவீசியவர்களில் அஸ்வனி குமார் (Ashwani Kumar) 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். Who is Ashwani Kumar: ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த 23 வயது இளைஞர்.. மும்பை அணியின் சூப்பர்ஸ்டார்.. யார் இந்த அஸ்வனி குமார்? 

மும்பை அணி அசத்தல் வெற்றி:

அதனைத்தொடர்ந்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் ஆட்டக்காரர்கள், அதிரடியாக விளையாடி அணியை வெற்றிபெறச் சென்றனர். ரோஹித் சர்மா 12 பந்துகளில் 13 ரன்கள், வில் ஜேக்ஸ் 17 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்தனர். ரியான் 41 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார், சூரியகுமார் யாதவ் 9 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். இதனால் மும்பை அணி 12.5 ஓவரில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. மும்பை அணியின் வெற்றி, வான்கடே மைதானத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

ராயன் ரெக்கல்டன் அசத்தல் பேட்டிங்:

ரோகித் சர்மா அதிரடி ஆட்டம்:

வெளுத்து வாங்கிய வில் ஜேக்ஸ்: