ஏப்ரல் 05, சேப்பாக்கம் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் (Chennai Super Kings Vs Delhi Capitals IPL 2025) அணிகள் இடையே ஆட்டம் நடைபெறுகிறது. நடப்பு சீஸனின் 17 வது ஆட்டத்தில் இரண்டு அணிகளும் மோதுகிறது. முதல் போட்டிக்கு பின் தொடர் தோல்வியை எதிர்கொண்டு வரும் சென்னை அணி வெற்றி அடையுமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணிக்கு 187 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. RCB Vs GT Highlights: இறுதிவரை போராடி சொந்த மண்ணில் கோட்டை விட்ட பெங்களூர்; படுதோல்வி.!
சென்னையில் தோனியின் பெற்றோர்:
இந்நிலையில், இன்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் எம்.எஸ் தோனியின் பெற்றோர் பான் சிங் - தேவகி தேவி ஆகியோர் நேரில் வந்து போட்டியை கண்டுகளித்தனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு எம்.எஸ் தோனி ஏப்ரல் 05 இன்று, இதேநாளில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தனது முதல் சதத்தை தோனி விசாகப்பட்டினத்தில் பதிவு செய்து மிகப்பெரிய கவனத்தை ஈர்த்திருந்தார். அதனைதொடர்ந்தே தோனி என்ற அடையாளம் உருவாகியது.
எம்.எஸ் தோனியின் பெற்றோர்:
Best photo on internet today
MS Dhoni’s daughter Ziva with MS Dhoni’s parents ❤️ pic.twitter.com/iju04fSTFA
— RCBIANS OFFICIAL (@RcbianOfficial) April 5, 2025