ஏப்ரல் 05, சேப்பாக்கம் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் (Chennai Super Kings Vs Delhi Capitals IPL 2025) அணிகள் இடையே ஆட்டம் நடைபெறுகிறது. நடப்பு சீஸனின் 17 வது ஆட்டத்தில் இரண்டு அணிகளும் மோதுகிறது. முதல் போட்டிக்கு பின் தொடர் தோல்வியை எதிர்கொண்டு வரும் சென்னை அணி வெற்றி அடையுமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. MS Dhoni: சிஎஸ்கே Vs டிசி போட்டியை நேரில் பார்த்த தோனியின் பெற்றோர்.!
டெல்லி அணி 183 ரன்கள் குவிப்பு:
டெல்லி அணியின் சார்பில் விளையாடியவைகளில் கேஎல் ராகுல் 51 பந்துகளில் 71 ரன்கள், அபிஷேக் போரல் 20 பந்துகளில் 33 ரன்கள், அக்சர் படேல் 14 பந்துகளில் 21 ரன்கள், சமீர் ரிஸ்வி 15 பந்துகளில் 20 ரன்கள், திரிஷ்டன் ஸ்டப் 12 பந்துகளில் 24 ரன்கள் அடித்தனர். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து. இதனால் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. சென்னை அணியின் சார்பில் பந்துவீசியவர்களில் கலீல் அகமத் 2 விக்கெட், ஜடேஜா, நூர் அகமத், மாதேஷா தலா 1 விக்கெட் கைப்பற்றி அசத்தி இருந்தனர்.

சென்னை அணி மீண்டும் மோசமான தோல்வி:
சென்னை அணியின் சார்பில் விளையாடிய ரவீந்திரா 6 பந்துகளில் 3 ரன்கள், தேவன் கான்வே 14 பந்துகளில் 13 ரன்கள், ருத்ராஜ் 4 பந்துகளில் 5 ரன்கள், துபே 15 பந்துகளில் 18 ரன்கள், ஜடேஜா 3 பந்துகளில் 2 ரன்கள் அடித்து இருந்தனர். விஜய் சங்கர் 54 பந்துகளில் 69 ரன்கள், தோனி 26 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தனர். இறுதியில் டெல்லி அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. சொதப்பல் ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்து வாய்ப்புகளை தவறவிட்ட சென்னை அணி மிகப்பெரிய தோல்வியை அடைந்தது. பந்துவீச்சில் எதிரணியின் பந்துவீச்சை கட்டுப்படுத்தினாலும், பேட்டிங்கில் தவறவிட்டது. அணியின் வெற்றிக்காக முயற்சியே எடுக்காமல் சென்னை அணி விளையாடியதுபோல தோற்றத்தை ஏற்படுத்தியதால், சென்னை அணி விளையாடும் சேப்பாக்கம் மைதானம் மிகப்பெரிய அமைதியில் இருந்தது. விஜய சங்கர் 50 ரன்கள் அடித்தபோதும், எந்த ஒரு ரசிகரும் வாழ்த்துக்களை தெரிவித்து சத்தத்தை எழுப்பவில்லை. மைதானமே மயான அமைதியாக இருந்தது. டெல்லி அணி பந்துவீச்சு, பீல்டிங்கில் அதிரடி காண்பித்தனர்.
ரச்சின் ரவீந்திரா விக்கெட் 3 ரன்களில் காலி:
Rachin Ravindra departs early.
📸: JioStar pic.twitter.com/zvbxwne6L1
— CricTracker (@Cricketracker) April 5, 2025
டெல்லி அணி பேட்டிங் தேர்வு:
🚨 Toss 🚨@DelhiCapitals won the toss and elected to bat against @ChennaiIPL
Updates ▶️ https://t.co/5jtlxucq9j #TATAIPL | #CSKvDC pic.twitter.com/YQ2hx92XNM
— IndianPremierLeague (@IPL) April 5, 2025
ஜடேஜா - தோனி செய்த ஜாலம்:
Jadeja 🤝 Dhoni = Chennai's Delight 💛
🎥 Enjoy this moment of fielding brilliance from the two #CSK greats 🙌
Scorecard ▶ https://t.co/5jtlxucq9j #TATAIPL | #CSKvDC | @msdhoni | @imjadeja | @ChennaiIPL pic.twitter.com/rdC5qgDivB
— IndianPremierLeague (@IPL) April 5, 2025
நூர் அகமத் அசத்தல்:
The Purple Cap holder adds to his tally ☝👌
A Noor Ahmad googly castles #DC captain Axar Patel 🕸#DC 103/3 after 12 overs.
Updates ▶ https://t.co/5jtlxucq9j #TATAIPL | #CSKvDC | @noor_ahmad_15 pic.twitter.com/8FFNRGR5VW
— IndianPremierLeague (@IPL) April 5, 2025