LSG Vs GT | IPL 2025 (Photo Credit: @IPL X)

ஏப்ரல் 12, லக்னோ (Cricket News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், நேற்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் (Chennai Super Kings Vs Kolkata Knight Riders IPL 2025) இடையே நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி அசத்தல் வெற்றி பெற்றது. சென்னை அணி 20 ஓவர்களில் 103 ரன்கள் மட்டுமே எடுக்க, மறுமுனையில் களமிறங்கிய கொல்கத்தா அணி 10 ஓவரில் ஆட்டத்தை முடித்து அசத்தியது. இதனால் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானமே மயான அமைதியில் இருந்தது. CSK VS KKR Highlights: இமாலய வெற்றி.. சேப்பாக்கத்தில் மஞ்சள் சிங்கங்கள் மயான அமைதி... மரண மாஸ் காட்டிய கொல்கத்தா.! 

சூப்பர் ஜெயிண்ட்ஸ் எதிர் டைட்டன்ஸ் (Super Giants Vs Titans):

அதனைத்தொடர்ந்து, இன்று லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் Vs குஜராத் டைட்டஸ் (Lucknow Super Giants Vs Gujarat Titans) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இன்று இரவு 07:30 மணியளவில் தொடங்கி நடைபெறுகிறது. தான் எதிர்கொண்ட 5 போட்டியில் 4ல் தரமான வெற்றி அடைந்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் குஜராத் அணியும், 5ல் 3ல் வெற்றிபெற்றுள்ள லக்னோ அணியும் இன்று பலபரீட்சை நடத்துகிறது. குஜராத் அணி தொடர் வெற்றியை உறுதி செய்யுமா? லக்னோ முன்னேறி வர முயற்சிக்குமா? என ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.