Ruturaj Gaikwad & Hardik Pandya (Photo Credit: @IPL X)

மார்ச் 23, சென்னை (Sports News): டாடா இந்தியன் பிரீமியர் லீக் 2025 (TATA Indian Premier League 2025) போட்டியில், 23 மார்ச் 2025 ஞாயிற்றுக்கிழமை இன்று, இரவு 07:30 மணியளவில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (Chennai Super Kings Vs Mumbai Indians) அணிகள் மோதுகிறது. ஐபிஎல் 2025 (IPL 2025) போட்டியில், சிஎஸ்கே - எம்ஐ (CSK Vs MI 2025) அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டம், சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இன்றைய ஆட்டத்தை ரசிகர்கள் நேரில் வந்து காண சிறப்பு பயண சேவையும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் போட்டியை காண டிக்கெட் வைத்திருந்தால், அதனை பயன்படுத்தி மெட்ரோவில் இலவச பயணமும் செய்துகொள்ளலாம். இந்த போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) பக்கத்தில் காணலாம். KKR Vs RCB Highlights: கிங் கானின் அணியை மிரட்டிவிட்ட கிங் கோலி; சேஸ் மாட்டார் விராட்.. பெங்களூர் அணி மாஸ் வெற்றி.! 

சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ்:

இன்று நடைபெறும் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings Squad 2025) அணியில், ருத்ராஜ் கைக்வாட் (Ruturaj Gaikwad), ராகுல் திரிபாதி, அன்றே சித்தார்த், ராமகிருஷ்ணா கோஷ், ரச்சின் ரவீந்திரா, சைக் ரஷீத், வன்ஷ் பேடி, எம்எஸ் தோனி (MS Dhoni), தேவன் கான்வே, ஜேமி ஓவர்டன், சாம் கரண், ஷ்ரேயஸ் கோபால், சிவம் டியூப், தீபக் ஹோடா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, விஜய் சங்கர், மதிஷா பத்திரானா, காமலேஹ் நாகர்கோடி, குர்ஜபினீத் சிங், அனுஷல் கம்போஜ், நாதன் எல்லிஸ், கலீல் அகமத், முகேஷ் சௌதாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians Squad 2025) அணியில், சூர்ய குமார் யாதவ், வில் ஜேக்ஸ், நமன் திர், பெவன் ஜேகப்ஸ், ரோஹித் சர்மா, என் திலக் வர்மா, ரொபின் மின்ஸ், ஸ்ரீஜித் கிருஷ்ணன், ரயான் ரிக்கேல்டன், ஹர்திக் பாண்டியா (Hardik Pandya), கோர்பின் போஸ், முஜீப் உர் ரஹ்மான், விக்னேஷ் புதூர், சத்யநாராயான பென்மேட்ஸா, அஸ்வினி குமார், ரேஸி தோபி, அர்ஜுன் தெண்டுல்கர், ட்ரெண்ட் போல்ட், மிட்செல் சான்டனர், ராஜ் அங்கட் பாவா, ஜஸ்பிரித் பும்ரா, தீபக் சாகர், கரண் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தல தோனி தரிசனத்துக்கு ரசிகர்கள் காத்திருப்பு:

கடந்த 17 ஐபிஎல் சீசன்களில் விளையாடி சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 கோப்பைகளை கைப்பற்றி தனி ராஜ்ஜியத்தை கட்டமைத்து இருக்கின்றன. இதனால் இன்றைய ஆட்டத்தில் இரண்டு அணிகளும் வெற்றிக்காக போராடும். அதேபோல, ரோஹித், ஹர்திக் ஆகியோரின் ஆட்டங்களை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போன்ற பல சர்வதேச அளவிலான போட்டியில் காணும் வாய்ப்புகள் கிடைத்தாலும், தல தோனியின் தரிசனத்தை காண ஐபிஎல் மட்டுமே வாய்ப்பை வழங்குகிறது. ஆதலால், தோனியின் செயல்பாடுகளை எதிர்பார்த்து இன்று ரசிகர்கள் சேப்பாக்கத்தில் திரளவுள்ளனர்.