
மார்ச் 23, சேப்பாக்கம் (Sports News): டாடா இந்தியன் பிரீமியர் லீக் 2025 (TATA Indian Premier League 2025) போட்டியில், 23 மார்ச் 2025 ஞாயிற்றுக்கிழமை இன்று, இரவு 07:30 மணியளவில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (Chennai Super Kings Vs Mumbai Indians) அணிகள் மோதுகிறது. ஐபிஎல் 2025 (IPL 2025) போட்டியில், சிஎஸ்கே - எம்ஐ (CSK Vs MI 2025) அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டம், சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) பக்கத்தில் காணலாம். SRH Vs RR: இமாலய இலக்கு.. 47 பந்துகளில் 106 ரன்கள் அடித்து விளாசிய இஷான் கிஷான்; ராஜஸ்தானுக்கு 106 ரன்கள் இலக்கு.!
இன்று சென்னை எதிரி மும்பை அணிகள் மோதல் (CSK Vs MI 2025):
இந்நிலையில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருத்ராஜ் கைக்வாட், பௌலிங் தேர்வு செய்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியின் இம்பேக்ட் பிளேயர்கள் லிஸ்டில் விக்னேஷ், அஸ்வனி, ராஜ் பாவா, கரன் சர்மா ஆகியோர் இருக்கின்றனர். சென்னை அணியின் இம்பேக்ட் பிளேயர்கள் வரிசையில் ராகுல் திரிபாதி, கமலேஷ் நாகர்கோடி, விஜய் சங்கர், ஜேமி ஒவர்டன், ஷைக் ரஷீத் இருக்கின்றனர்.
சென்னை - மும்பை அணி வீரர்கள் விபரம் (Chennai Vs Mumbai Squad 2025 Today):
மும்பை இந்தியன்ஸ் அணியின் (MI Squad 2025) சார்பில் ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நமன் திர், ராபின் மின்ஸ், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரெண்ட் போல்ட், சத்தியநாராயண ராஜு ஆகியோர் இன்று விளையாடுகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் (CSK Squad 2025) சார்பில் ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன், எம்எஸ் தோனி, ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, நாதன் எல்லிஸ், கலீல் அகமது ஆகியோர் விளையாடுகின்றனர்.
50 வது ஐபிஎல் டி20 போட்டியில் ஜடேஜா:
Thalapathy 5️⃣0️⃣*! 🔥⚔️#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/cq2MUXlCVt
— Chennai Super Kings (@ChennaiIPL) March 23, 2025
டாஸ் வென்ற சென்னை பௌலிங் தேர்வு (CSK Vs MI Toss Update 2025):
🚨 Toss from the MA Chidambaram Stadium 🏟@ChennaiIPL won the toss and elected to bowl against @mipaltan
Updates ▶️ https://t.co/QlMj4G7kV0 #TATAIPL | #CSKvMI pic.twitter.com/y4Ddqxvr1n
— IndianPremierLeague (@IPL) March 23, 2025