மார்ச் 27, சென்னை (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டித்தொடரில், எட்டாவது ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் (Chennai Super Kings Vs Royal Challengers Bangalore) அணிகள் இடையே நடைபெறுகிறது. இந்த ஆட்டம், சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் (MA Chidambaram Stadium) வைத்து நடைபெறுகிறது. 28 மார்ச் 2025 அன்று, இரவு 07:30 மணியளவில் ஆட்டம் தொடங்கி நடைபெறுகிறது. இந்த போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar) செயலி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) பக்கத்தில் நேரலையில் பார்க்கலாம்.
சென்னை எதிர் பெங்களூர் (CSK Vs RCB IPL 2025):
முன்னதாக கடந்த 23ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டத்தில், சென்னை அணி வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து, நாளை சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்கின்றன. இந்த ஆட்டத்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் டிக்கெட் வாங்கி காத்திருக்கின்றனர். சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான ஆட்டம், எப்போதும் ரசிகர்களால் மிகவும் பரபரப்பான வகையில் எதிர்பார்க்கப்படும் என்பதால், நாளை சேப்பாக்கம் மைதானம் கலைக்கட்டவுள்ளது. SRH Vs LSG Highlights: முதல் வெற்றியை உறுதி செய்த லக்னோ.. திணறிப்போன ஹைதராபாத்.! அசத்தல் ஹைலைட்ஸ் இதோ.!
சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி வீரர்கள்:
ருத்ராஜ் கைக்வாட் (Ruturaj Gaikwad) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் (CSK Squad IPL 2025) ராகுல் திரிபாதி, ஆண்ட்ரே சித்தார்த், ராமகிருஷ்ணா கோஷ், ரச்சின் ரவீந்திரா, ஷைக் ரஷீத், வன்ஷ் பேடி, எம்எஸ் தோனி (MS Dhoni), தேவன் கான்வே, ஜேமி ஓவர்டன், சாம் கர்ரன், ஷ்ரேயஸ் கோபால், சிவம் டியூப், தீபக் ஹோடா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, விஜய் சங்கர், மாதேஷா பதிரனா, கமலேஷ் நாகர்கோடி, குஜப்னீத் சிங், அனுஸுல் கம்போஜ், நாதன் எல்லிஸ், கலீல் அகமத், முகேஷ் சௌதாரி, நூர் அகமத் ஆகியோர் விளையாடுகின்றனர்.
ரஜத் படிதார் (Rajat Patidar) தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் (RCB Squad IPL 2025) விராட் கோலி, தேவதத் படிக்கல், ஸ்வஸ்திக் சிகாரா, ஜிதேஷ் சர்மா, பில் சால்ட், ஸ்வப்னில் சிங், மனோஜ் பன்டாஜ், குர்னால் பாண்டியா, லியம் லிவிங்ஸ்டன், திம் டேவிட், ஜேக்கப் பெத்தல், புவனேஸ்வர் குமார், ரசிக் தார், சுயாஸ் சர்மா, மோகித் ராதே, அபிநந்தன் சிங், ஜோஷ் ஹஸலேவுட், ரோமரியோ ஷெப்பர்ட், நுவன் துஷாரா, யாஷ் தயல், லுங்கிஸினி நிகிடி ஆகியோர் விளையாடுகின்றனர்.