மார்ச் 28, சென்னை (Sports News): டாடா இந்தியன் பிரீமியர் லீக் 2025 (TATA IPL 2025) போட்டியில், இன்று 8 வது ஆட்டம், சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Chennai Super Kings Vs Royal Challengers Bangalore) அணிகள் இடையே நடக்கும் ஆட்டத்தை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil), ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar) பக்கத்தில் நேரலையில் காணலாம். டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், பௌலிங் தேர்வு செய்தார். இதனால் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. Virat Kohli: ஹெல்மட்டில் தாக்கிய பத்திரனா.. 6, 4 விளாசி ரச்சினிடம் விக்கெட் கொடுத்த விராட்.! கோலி விக்கெட் காலி.!
பெங்களூர் அணியின் அதிரடி ஆட்டம் (CSK Vs RCB IPL 2025):
பெங்களூர் தொடக்கத்தில் களமிறங்கிய ஆர்சிபி அணியின் வீரர் பில் சால்ட் (Phil Salt), 16 பந்துகளில் 32 ரன்கள் அடித்து அவுட் ஆகி வெளியேறினார். 5.0 வது ஓவரில், நூர் அகமத் (Noor Ahmad) பந்துவீச்சின்போது, நொடிக்கும் குறைவான நேரத்தில், தோனியின் மின்னல் வேக செயல்பாடு காரணமாக விக்கெட் இழந்தார். பின் களத்தில் இருந்த படிக்கல் 14 பந்துகளில் 27 ரன்கள் அடித்து அவுட் ஆகி வெளியேறினார். அஸ்வினின் பந்துவீச்சில், 7.5 வது ஓவரில், அஸ்வினின் பந்தை எதிர்கொண்ட படிக்கல், ருத்ராஜிடம் கேட்ச் கொடுத்து விக்கெட் இழந்து வெளியேறினார். அதனைத்தொடர்ந்து, விராட் கோலி 31 பந்துகளில் 30 ரன்கள் அடித்து வெளியேறினார். 12.2 வது ஓவரில் நூர் அகமது பந்துவீசியில், ரச்சினிடம் கேட்ச் அவுட் கொடுத்து வெளியேறினார். லியம் லிவிங்ஸ்டன் 9 பந்துகளில் 10 ரன்னும், ஜிதேஷ் சர்மா 6 பந்துகளில் 12 ரன்னும் அடித்து அவுட் ஆகி இருந்தனர். டேவிட் 8 பந்துகளில் 22 ரன்கள் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கவுள்ளது.
சென்னை அணியின் சார்பில் பந்துவீசியவர்களில் நூர் அகமத் 3 விக்கெட், மதிஷா பத்திரனா 2 விக்கெட், கலீல் அகமத், ரவிசந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றி இருந்தனர்.
நூர் அகமத் அசத்தல் பந்துவீச்சு:
How do you reply after you are hit for a six? 🤔
Noor Ahmad says TIMBER STRIKE 🎯
Updates ▶ https://t.co/I7maHMwxDS #TATAIPL | #CSKvRCB | @ChennaiIPL | @noor_ahmad_15 pic.twitter.com/5iPkPjxWwe
— IndianPremierLeague (@IPL) March 28, 2025
டாஸ் வென்று சென்னை பந்துவீச்சு:
🚨 Toss 🚨@ChennaiIPL elected to field against @RCBTweets
Updates ▶️ https://t.co/I7maHMwxDS #TATAIPL | #CSKvRCB pic.twitter.com/prn0Ckrfo7
— IndianPremierLeague (@IPL) March 28, 2025
ரஜத் படிதார் அசத்தல் ஆட்டம்:
FOR WA - Rajat P - 50
5️⃣0️⃣ up for RCB's Gen BOLD skipper! 👏#RajatPatidar led the fight from the front, scoring his first half-century as RCB captain! 🙌👌🫡#IPLonJioStar 👉 CSK 🆚 RCB | LIVE NOW on SS-1, SS-1 Hindi, SS-3 & JioHotstar! pic.twitter.com/1oMYYAqxiY
— Star Sports (@StarSportsIndia) March 28, 2025
விராட் கோலி வெறியாட்டம்:
1st ball – 😮💨
2nd ball – 6️⃣
That’s what it’s like facing the GEN GOLD! ❤
Classy counter from #ViratKohli! 🙌🏻
Watch LIVE action ➡ https://t.co/MOqwTBm0TB#IPLonJioStar 👉 #CSKvRCB | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, Star Sports 3 & JioHotstar! pic.twitter.com/MzSQTD1zQc
— Star Sports (@StarSportsIndia) March 28, 2025
எம்.எஸ் தோனியின் மின்னல் வேக செயல்பாடு:
Ladies & gentlemen, presenting the GEN GOLD who never gets OLD! ⚡🔥#MSDhoni pulls off yet another lightning-fast stumping and this time, it's #PhilSalt who’s left stunned! 😮💨💪🏻
Watch LIVE action ➡ https://t.co/MOqwTBm0TB#IPLonJioStar 👉 #CSKvRCB | LIVE NOW on Star Sports… pic.twitter.com/kK3B5jxhXT
— Star Sports (@StarSportsIndia) March 28, 2025