IPL 2025: Match 8 - CSK Vs RCB (Photo Credit: @IPL X)

மார்ச் 28, சேப்பாக்கம் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், இன்று 8 வது ஆட்டம், சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Chennai Super Kings Vs Royal Challengers Bangalore) அணிகள் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் இரண்டு அணிகளும் வெற்றிக்காக போராடவுள்ளது. இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil), ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar) பக்கத்தில் நேரலையில் காணலாம். CSK Vs RCB: தோனியா? விராட்டா? சம்பவத்துக்கு காத்திருக்கும் ரசிகர்கள்.. சிஎஸ்கே வெர்சஸ் ஆர்சிபி.. மேட்ச் அப்டேட் இதோ.!

சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், பௌலிங் தேர்வு செய்தார். இதனால் ரஜத் படிதார் தலைமையிலான கிரிக்கெட் அணி பேட்டிங் செய்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB Squad 2025 IPL 2025) அணியில் சார்பில் விராட் கோஹ்லி, பில் சால்ட், தேவ்டட் படிகல், ராஜத் பட்டிதர், லியாம் லிவிங்ஸ்டே, ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், க்ருனல் பாண்ட்யா, புவன்வர் குமார், ஜோஷ் ஹஸ்ல்வுட் ஆகியோர் இன்று விளையாடுகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK Squad 2025 IPL 2025) அணியின் சார்பில் ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ருத்ராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா, சாம் குர்ரான், ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி (டபிள்யூ.கே), ரவிச்சந்திரன் அஸ்வின், நோராத், மாத்தேஸ் பதிரானா, கலீல் அகமத் ஆகியோர் விளையாடுகின்றனர்.

சென்னை அணி டாஸ் வென்று பௌலிங்: