CKS Vs RCB | IPL 2025: Ruturaj & Tripati Wickets by Josh (Photo Credit: @LoyalSachinFan @goatkohli18_ @mufaddal_vohra X)

மார்ச் 28, சென்னை (Sports News): டாடா இந்தியன் பிரீமியர் லீக் 2025 (TATA IPL 2025) போட்டியில், இன்று 8 வது ஆட்டம், சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Chennai Super Kings Vs Royal Challengers Bangalore) அணிகள் இடையேயான ஆட்டத்தில், சென்னை அணியின் வெற்றிக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தனது இலக்கை நோக்கிய பயணத்தில் சென்னை அணி விளையாடி வருகிறது. CSK Vs RCB: அரைசதம் கடந்து ரஜத் அசத்தல்.. சென்னையில் கில்லி சம்பவம் செய்த பெங்களூர்.. சிஎஸ்கே அணிக்கு 197 ரன்கள் இலக்கு.! 

சென்னை அணியின் 3 விக்கெட் காலி:

இந்நிலையில், சென்னை அணியின் சார்பில் களமிறங்கிய ராகுல் திரிபாதி 3 பந்துகளில் 5 ரன்கள் மட்டும் அடித்து அவுட் ஆகினார். அதனைத்தொடர்ந்து, ருத்ராஜ் 4 பந்துகளில் ரன்கள் ஏதும் அடிக்காமல் அவுட் ஆகினார். ஜோஷ் ஹஸ்லேவுட் பந்துவீச்சில், இரண்டாவது ஓவரில் இரண்டு விக்கெட் காலியானது. 1.2 வது பந்தில் திரிபாதி, 2.0 வது பந்தில் ருத்ராஜ் ஆகியோர் விக்கெட் இழந்தனர். இது சென்னை அணிக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து, 4.4 ஓவரில் தீபக் ஹோடா 9 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.