மார்ச் 28, சென்னை (Sports News): டாடா இந்தியன் பிரீமியர் லீக் 2025 (TATA IPL 2025) போட்டியில், இன்று 8 வது ஆட்டம், சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Chennai Super Kings Vs Royal Challengers Bangalore) அணிகள் இடையேயான ஆட்டத்தில், சென்னை அணியின் வெற்றிக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தனது இலக்கை நோக்கிய பயணத்தில் சென்னை அணி இறுதியில் தோல்வியை தழுவியது. பெங்களூர் அணியின் அதிரடி பேட்டிங் மற்றும் பௌலிங் செயல்பாடுகள், சென்னை மண்ணில் சிஎஸ்கே அணியை தோற்கடிக்க உதவியது. கடந்த 2008க்கு பின், சென்னை மைதானத்தில் ஆர்.சி.பி அணி, இன்று 17 ஆண்டுகள் கழித்து வெற்றி அடைந்துள்ளது. CSK Vs RCB: அரைசதம் கடந்து ரஜத் அசத்தல்.. சென்னையில் கில்லி சம்பவம் செய்த பெங்களூர்.. சிஎஸ்கே அணிக்கு 197 ரன்கள் இலக்கு.!
பெங்களூர் அணி திரில் வெற்றி:
பெங்களூர் தொடக்கத்தில் களமிறங்கிய ஆர்சிபி அணியின் வீரர் பில் சால்ட் (Phil Salt), 16 பந்துகளில் 32 ரன்கள் அடித்து அவுட் ஆகி வெளியேறினார். 5.0 வது ஓவரில், நூர் அகமத் (Noor Ahmad) பந்துவீச்சின்போது, நொடிக்கும் குறைவான நேரத்தில், தோனியின் மின்னல் வேக செயல்பாடு காரணமாக விக்கெட் இழந்தார். பின் களத்தில் இருந்த படிக்கல் 14 பந்துகளில் 27 ரன்கள் அடித்து அவுட் ஆகி வெளியேறினார். அஸ்வினின் பந்துவீச்சில், 7.5 வது ஓவரில், அஸ்வினின் பந்தை எதிர்கொண்ட படிக்கல், ருத்ராஜிடம் கேட்ச் கொடுத்து விக்கெட் இழந்து வெளியேறினார். அதனைத்தொடர்ந்து, விராட் கோலி 31 பந்துகளில் 30 ரன்கள் அடித்து வெளியேறினார். 12.2 வது ஓவரில் நூர் அகமது பந்துவீசியில், ரச்சினிடம் கேட்ச் அவுட் கொடுத்து வெளியேறினார். லியம் லிவிங்ஸ்டன் 9 பந்துகளில் 10 ரன்னும், ஜிதேஷ் சர்மா 6 பந்துகளில் 12 ரன்னும் அடித்து அவுட் ஆகி இருந்தனர். டேவிட் 8 பந்துகளில் 22 ரன்கள் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கவுள்ளது. சென்னை அணியின் சார்பில் பந்துவீசியவர்களில் நூர் அகமத் 3 விக்கெட், மதிஷா பத்திரனா 2 விக்கெட், கலீல் அகமத், ரவிசந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றி இருந்தனர். KKR Vs LSG Match Rescheduled: ஐபிஎல் 2025: கொல்கத்தா - லக்னோ அணிகளுக்கு இடையேயான ஆட்டம் தேதி மாற்றம்.!
சென்னை அணி சொந்த மண்ணில் படுதோல்வி:
சென்னை அணியின் சார்பில் விளையாடியவர்களில் ரச்சின் ரவீந்திரா 31 பந்துகளில் 41 ரன்கள், சிவம் டியூப் 15 பந்துகளில் 19 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 19 பந்துகளில் 25 ரன்கள், அஸ்வின் 8 பந்துகளில் 11 ரன்கள் அடித்து இருந்தனர். தல தோனி 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து இருந்தார். ஆட்டத்தின் முடிவில் சென்னை அணி 8 விக்கெட் இழப்புக்கு ரன்கள் 146 எடுத்தது. இதனால் சென்னை அணி படுதோல்வி அடைந்தது. சொந்த மண்ணில் 17 ஆண்டுகளுக்கு பின் சென்னை ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்துள்ளது. பெங்களூர் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. ஏற்கனவே ரசிகர்கள் நம்பர் 18, டாடா ஐபிஎல் சீசன் 18, இன்றைய போட்டி 8 எதோ தோணுகிறது என கூறி வருகின்றனர். அதாவது, விராட் இடம்பெற்று இருக்கும் இருக்கும் அணி 18 ஆண்டுகளாக ஒரு ஐபிஎல் கப் கூட பெறவில்லை. இறுதி வரை சென்று சில சமயம் தோற்றுள்ளது. 18 வது சீசன் ஐபிஎல் போட்டியில், 18 நம்பர் கொண்ட விராட் கோலி அணி வெற்றி அடையுமா? என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் போட்டிகளில் 3000 ரன்களை கடந்த ரவீந்திர ஜடேஜா:
New milestone unlocked 🔓
3️⃣0️⃣0️⃣0️⃣ runs in the #TATAIPL and plenty more to come 🔥
Congratulations @imjadeja 👏
Updates ▶ https://t.co/I7maHMwxDS #CSKvRCB | @ChennaiIPL pic.twitter.com/amsGeUs9xH
— IndianPremierLeague (@IPL) March 28, 2025
தோனியின் மின்னல் வேக செயல்பாடு:
2️⃣ moments of magic 2️⃣ ultra fast stumpings ⚡
Which one did you enjoy the most? 🤔
Scorecard ▶ https://t.co/I7maHMwxDS #TATAIPL | #CSKvRCB pic.twitter.com/SxPcEphB6Y
— IndianPremierLeague (@IPL) March 28, 2025
நூர் அகமத் அசத்தல் பந்துவீச்சு:
How do you reply after you are hit for a six? 🤔
Noor Ahmad says TIMBER STRIKE 🎯
Updates ▶ https://t.co/I7maHMwxDS #TATAIPL | #CSKvRCB | @ChennaiIPL | @noor_ahmad_15 pic.twitter.com/5iPkPjxWwe
— IndianPremierLeague (@IPL) March 28, 2025