PBKS Vs MI IPL 2025 (Photo Credit : @IPL X)

மே 26, ஜெய்பூர் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், நேற்று நடந்த ஹைதராபாத் - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், ஹைதராபாத் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. அதேபோல, சென்னை - குஜராத் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் சென்னை அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. இத்துடன் இரண்டு அணிகளும் நடப்பு தொடரில் இருந்து முற்றிலும் விலகிக்கொண்டன. GT Vs CSK IPL 2025: இறுதியாக ஒரேயொரு வெற்றி வருமா? சென்னை அணி இன்று குஜராத்துடன் மோதல்.!

பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் (Punjab Kings Vs Mumbai Indians IPL 2025)

அதனைத்தொடர்ந்து, இன்று நடப்பு ஐபிஎல் தொடரின் 69வது ஆட்டம் நடக்கிறது. இந்த போட்டியில் கிங்ஸ் எதிர் இந்தியன்ஸ் அணிகள் நேரடியாக மோதுகின்றன. புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணி, 4 வது இடத்தில் இருக்கும் மும்பை அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி அடையுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.