R. Parag & P. Cummins (Photo Credit: @IPL X)

மார்ச் 23, ஹைதராபாத் (Sports News): டாடா இந்தியன் பிரீமியர் லீக் 2025 (TATA Indian Premier League 2025) போட்டியில், 23 மார்ச் 2025 ஞாயிற்றுக்கிழமை இன்று, நண்பகல் 03:30 மணியளவில், நடப்பு சீஸனின் இரண்டாவது ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் (SunRisers Hyderabad Vs Rajasthan Royals) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) செயலி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். CSK Vs MI: 18 ஆண்டுகளாக ஒரே ராஜ்ஜியம்.. இன்று சென்னை - மும்பை அணிகள் நேரடி மோதல்.. கொண்டாட்டத்தில் திணறப்போகும் சேப்பாக்.! 

ஹைதராபாத் அணி பேட்டிங் செய்கிறது:

இந்நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனால் சன் ரைடர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பில் (Rajasthan Royals Squad 2025) ஒய் ஜெய்ஸ்வால், என் ராணா, ஆர் பராக், எஸ் ஹெட்மியர், டி ஜூரல், எஸ் துபே, எம் தீக்ஷனா, ஜே ஆர்ச்சர், டி தேஷ்பாண்டே, எஸ் ஷர்மா, எஃப் ஃபரூக்கி ஆகியோர் விளையாடுகின்றனர். ஹைதராபாத் அணியின் சார்பில் ஏ. சர்மா, டி. ஹெட், இ. கிஷன், என். ரெட்டி, எச். கிளாசென், ஏ. மனோகர், ஏ. வர்மா, பி. கம்மின்ஸ், எச். படேல், எம். ஷமி, எஸ். சிங் ஆகியோர் விளையாடுகின்றனர்.

ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பௌலிங் தேர்வு: