பிப்ரவரி 27, பெங்களூர் (Cricket News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 (TATA Women's Premier League 2025) போட்டித்தொடரில், இன்றைய 12 வது ஆட்டத்தில் பெங்களுர் - குஜராத் அணிகள் மோதிக்கொண்டன. டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங் செய்தது. சொந்த மண்ணில் அடுத்தடுத்த 2 போட்டியில் தோல்வி அடைந்த பெங்களூர் அணி, இந்த போட்டியிலாவது வெற்றி அடைய வேண்டும் என முனைப்புடன் களமிறங்கியது. அதேநேரத்தில், குஜராத் மண்ணில் முதல் போட்டியில் தோல்வி அடைந்த குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி, பெங்களூர் மண்ணில்,  ஆர்சிபி அணியை தோல்வியுறச்செய்து பழிதீர்க்க தீவிர களப்பயிற்சி எடுத்தது. டாஸின் தொடக்கமும் குஜராத்துக்கு சாதகமாகி, அந்த அணி பௌலிங் செய்தது. Danni Wyatt-Hodge: ஐந்து ஓவரிலேயே 3 விக்கெட் காலி; தானி, பெர்ரி, மந்தனா விக்கெட்.. டி. தோட்டின், ஆஷ் கார்ட்னர் அசத்தல்.! WPL-ல் முதல் முறை.!  

தடுமாறிய பெங்களூர்., அடுத்தடுத்த விக்கெட்டால் பதறிப்போன வீரர்கள் & ரசிகர்கள்:

இந்நிலையில், பெங்களூர் அணியின் சார்பில் முதலில் களமிறங்கிய வீராங்கனைகளில் ஸ்மிருதி மந்தனா 20 பந்துகளில் 10 ரன்னும், டேனி வாட் 4 பந்துகளில் 4 ரன்னும், எலிசி ரன்கள் ஏதும் அடிக்காமலும், ராகவி பிஸ்ட் (Raghvi Bist) 19 பந்துகளில் 22 ரன்னும், கனிகா 28 பந்துகளில் 33 ரன்னும், ரிச்சா கோஷ் 10 பந்துகளில் 9 ரன்னும், ஜியார்ஜியா 21 பந்துகளில் 20 ரன்னும், கிம் 15 பந்துகளில் 14 ரன்னும் அடித்து இருந்தனர். இன்றைய ஆட்டத்தில் குஜராத் அணியின் பந்துவீச்சு, பெங்களூருக்கு எதிராக சிறப்பாக இருந்தது. மேலும், சொந்த மண்ணில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில், அதிக மன அழுத்தத்தில் இருந்த பெங்களூர் அணியின் தொடக்க விக்கெட்டுகள் சரிவு, அணியினருக்கு தொய்வை தந்து ரன்களை குவிக்க இயலாத வழிவகை செய்தது. ராகவி, கனிகா, ஜியார்ஜியா நின்று ஆடினாலும், ரன்களை குவிக்க இயலவில்லை. இதனால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்த பெங்களூர் அணி 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் குஜராத் அணி களமிறங்கவுள்ளது.  குஜராத் அணியின் சார்பில் பந்துவீசியவர்களில் டி. தோட்டின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தனர். RCB Vs GG Toss Update: சொந்த மண்ணில் வெற்றிக்காக போராடும் ஆர்சிபி.. டாஸ் வென்று குஜராத் பௌலிங்.! 

எலிசி பெர்ரி விக்கெட் பறிபோனது:

பாரதி புல்மாலி (Bharti Fulmali) அசத்தல் பீல்டரிங்:

ஸ்மிருதி மந்தனாவின் (Smriti Mandhana) விக்கெட் காலி:

டி. தோட்டின் டானியின் விக்கெட் வீழ்த்திய காட்சி: