DC Vs MI | WPL 2025 Final (Photo Credit: @WPLT20 X)

மார்ச் 14, மும்பை (Sports News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் டபிள்யுபிஎல் 2025 (TATA Women's Premier League WPL 2025) போட்டிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தன. கடந்த பிப்ரவரி 14 அன்று முதல் தொடங்கி நடைபெற்ற ஆட்டம், நாளையுடன் (15 மார்ச் 2025) நிறைவு பெறுகிறது. கோலாகலமான கொண்டாட்டத்துடன் குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில், இறுதிப்போட்டிக்கு டெல்லி கேபிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (Delhi Capitals Vs Mumbai Indians Women 2025) அணிகள் தேர்வு பெற்றுள்ளன.

பலம்பொருந்திய மும்பை - டெல்லி அணிகள்:

மெக் லேனிங் (Meg Lanning) தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், ஹர்மன்பிரீத் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் இறுதி போட்டியில் மோதுகிறது. இரண்டு அணிகளும் கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் மோதி, மும்பை அணி முதல் பெண்கள் பிரீமியர் லீக் கோப்பையை பெற்றது. 2024ம் ஆண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இறுதிப்போட்டியில் வென்று கோப்பையை தனதாக்கியது. MI Vs GG Highlights: மும்பை அணி இறுதிப்போட்டிக்கு தேர்வு.. 47 ரன்கள் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி; பெண்கள் பிரீமியர் லீக் 2025..! 

வெற்றி யாருக்கு?

மூன்றாவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ள பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில், மும்பை - டெல்லி அணிகள் மீண்டும் மோதுகின்றன. இதன் இரண்டாவது வெற்றியை அடைந்து மும்பை சாதனை படைக்குமா? முதல் வெற்றியை அடைந்து டெல்லி அணி கோப்பையை கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. இதனால் நாளை நடைபெறவுள்ள ஆட்டம் அதிகம் கவனிக்கப்படுகிறது. இதில் டெல்லி அணி முதலிலேயே லீக் சுற்றுகளில் வெற்றி அடைந்து இறுதிப்போட்டிக்கு நேரடியாக தேர்வாகியது. மும்பை அணி, நேற்றைய போட்டியில் குஜராத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தேர்வாகியது. நாளை கோலாகலமான கொண்டாட்டத்துடன் இறுதி போட்டி தொடங்கவுள்ளதால், போட்டி வழக்கமான நேரத்தை விட அரைமணிநேரம் பின் தொடங்குகிறது.

  • போட்டி நடைபெறும் நாள்: 15 மார்ச் 2025, சனிக்கிழமை
  • போட்டி நடைபெறும் இடம்: ப்ராபோர்னே ஸ்டேடியம் (Brabourne Stadium), மும்பை
  • போட்டி தொடங்கும் நேரம்: இரவு 08:00 மணி (இந்திய நேரப்படி)
  • போட்டி டாஸ் நேரம்: இரவு 07:30 மணி (இந்திய நேரப்படி)
  • போட்டி நேரலை (Where to Watch WPL 2025 Live) ஓடிடி: ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar)
  • போட்டி நேரலை டிவி: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) & ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil)

டெல்லி கேபிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணி மோதல்:

2 அணிகள் மோதும் போட்டியில், ஒருவருக்கே கோப்பை: