
மார்ச் 13, மும்பை (Sports News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 (TATA Women's Premier League) போட்டியில், இன்று எலிமினேட்டர் ஆட்டம் நடைபெற்றது. புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் டெல்லி கேபிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தேர்வாகிவிட்ட நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தினை தக்கவைத்த மும்பை மற்றும் குஜராத் பெண்கள் (Mumbai Indians Vs Gujarat Giants WPL 2025) அணி இன்று எலிமினேட்டர் ஆட்டத்தில் மோதிக்கொண்டது. இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டியில் டெல்லியை எதிர்கொள்ளும். எலிமினேட்டர் ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி, பீல்டரிங் தேர்வு செய்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. MI Vs GG Eliminator: பெண்கள் பிரீமியர் லீக்; ஹைலே, நடாலி அரை சதம் கடந்து அசத்தல்.! குஜராத் அணிக்கு 214 ரன்கள் இலக்கு.!
குஜராத்துக்கு 214 ரன்கள் இலக்கு நிர்ணயம்:
முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில், இன்று இரண்டு வீரர்கள் அரைசதம் கடந்து அசத்தினர். யாஸ்திகா பாட்டியா 14 பந்துகளில் 15 ரன்கள் அடித்து இருந்தார். ஹெய்லே 50 பந்துகளில் 77 ரன்கள் அடித்து அரைசதம் கடந்தார். நடாலி சிவர் 41 பந்துகளில் 77 ரன்கள் அடித்து அசத்தினார். ஹர்மன் ப்ரீத் (Harmanpreet Kaur) 11 பந்துகளில் 36 ரன்கள் அடித்து அசத்தினார். போட்டியின் முடிவில் மும்பை அணிகள் 213 ரன்கள் எடுத்தது. இதனால் குஜராத் அணியின் வெற்றிக்கு 214 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மும்பை அணி திரில் வெற்றி:
குஜராத் அணியின் சார்பில் களமிறங்கியவர்களில் பெத் முனி 5 பந்துகளில் 6 ரன்கள், தானி கிளப்சன் 24 பந்துகளில் 34 ரன்கள், ஹர்லீன் 9 பந்துகளில் 8 ரன்கள், ஆஷ் கார்ட்னர் 4 பந்துகளில் 8 ரன்கள், பூபே லெட்சிபைடு 20 பந்துகளில் 31 ரன்கள், பார்தி 20 பந்துகளில் 30 ரன்கள் கஷ்வீ 6 பந்துகளில் 4 ரன்கள், சிம்ரன் 8 பந்துகளில் 17 ரன்கள், தனுஜா 12 பந்துகளில் 18 ரன்கள் அடித்து இருந்தனர். இறுதியில் குஜராத் அணி 19.2 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் மும்பை அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
பாரதி அசத்தல் பேட்டிங்:
Bharti Fulmali in the house 🏡💪
And she has arrived in style 😉#GG will need plenty more of those 🤞
Updates ▶ https://t.co/v62GxzKUW2 #TATAWPL | #MIvGG | #Eliminator | @Giant_Cricket pic.twitter.com/CSrKtSz6Np
— Women's Premier League (WPL) (@wplt20) March 13, 2025
ஹெய்லே அசத்தல்:
Now, that's how you comeback 😎
The Hayley Matthews show continues....(this time, with the ball) 🍿
Updates ▶ https://t.co/v62GxzKUW2 #TATAWPL | #MIvGG | #Eliminator | @MyNameIs_Hayley pic.twitter.com/n1jmVsNnHt
— Women's Premier League (WPL) (@wplt20) March 13, 2025