Match 14: RCB Vs DC (Photo Credit: @WPLT20 X)

மார்ச் 01, பெங்களூர் (Cricket News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 (TATA Women's Premier League 2025) போட்டியில், இன்று பெங்களூர் மா. சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பெண்கள் கிரிக்கெட் அணி - டெல்லி கேபிட்டல்ஸ் கிரிக்கெட் அணி (Royal Challengers Bengaluru Vs Delhi Capitals Women's WPL 2025) மோதியது. போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பௌலிங் தேர்வு செய்தது. இதனால் பெங்களூர் அணி பேட்டிங் செய்தது. RCB VS DC Toss Update: சொந்த மண்ணில் ஆறுதல் வெற்றி அடையுமா பெங்களூர்? டெல்லி அணி டாஸ் வென்று பௌலிங் தேர்வு.! 

டெல்லி வெற்றிக்கு எளிய இலக்கு:

பெங்களூர் அணியின் சார்பில் களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana) 7 பந்துகளில் 8 ரன்கள், டேனி வாட் 18 பந்துகளில் 21 ரன்கள், எலிசி பெர்ரி 47 பந்துகளில் 60 ரன்கள், ராகவி பிஸ்ட் (Raghvi Bist) 32 பந்துகளில் 33 ரன்கள், ஜியார்ஜியா 10 பந்துகளில் 12 ரன்கள் எடுத்திருந்தனர். ஆட்டத்தின் முடிவில் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. மும்பை அணியின் பந்துவீச்சாளர்கள் ஷிகா, சாரணி ஆகியோர் தலா 2 விக்கெட்டை கைப்பற்றி இருந்தனர். இதனால் 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியுள்ளது.

சாரணி அசத்தல் செயல்பாடு:

எலிசி பெர்ரி அசத்தல் ஆட்டம்:

எலிசி 50 ரன்கள் எடுத்து மாஸ் ஆட்டம்: