
மார்ச் 01, பெங்களூர் (Cricket News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 (TATA Women's Premier League 2025) போட்டியில், நேற்று நடைபெற்ற 13 வது ஆட்டத்தில் டெல்லி - மும்பை அணிகள் மோதிக்கொண்டு, இறுதியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றி அடைந்தது. இன்று (01 மார்ச் 2025) பெங்களூர் மா. சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து, இரவு 07:30 மணியளவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பெண்கள் கிரிக்கெட் அணி - டெல்லி கேபிட்டல்ஸ் கிரிக்கெட் அணி (Royal Challengers Bengaluru Vs Delhi Capitals Women's WPL 2025) மோதுகிறது. இந்த சீசன் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த பெங்களூர் அணி, தனது சொந்த மண்ணில் எதிர்கொண்ட 3 போட்டியிலும், அடுத்தடுத்து தோல்வி அடைந்து வெற்றிபெற இயலாமல் தவித்து, புள்ளிப்பட்டியலில் பின்னோக்கி பயணித்து வருகிறது. ENG Vs SA: இங்கிலாந்துக்கு மிகப்பெரிய இழப்பு.. 179 ரன்களுக்கு ஆல் அவுட்.!
பெங்களூர் அணி பேட்டிங்:
இன்று நடைபெறும் 14 வது போட்டியில் ராயல் பெங்களூர் - டெல்லி அணிகள் (Women RCB Vs DC Cricket) மோதுகின்றன. இந்த ஆட்டம் இறுதியாக பெங்களூருக்கு சொந்த மண்ணில் நடக்கும் இறுதி ஆட்டம் என்பதால், இந்த போட்டியில் வெற்றி பெற்றாவது பெங்களூர் தனது ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், டாஸ் வென்ற டெல்லி அணி பௌலிங் தேர்வு செய்தது. இதனால் பெங்களூர் அணி பேட்டிங் செய்கிறது. இன்றைய போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் பெங்களூர் உள்ளது. நாளை மறுநாள் முதல் ஆட்டம் லக்னோவில் நடைபெறுகிறது.
இன்று களமிறங்கவுள்ள வீரர்கள்:
டெல்லி கேப்பிடல்ஸ் (Delhi Capitals Playing Squad) அணியில் இன்று மெக் லானிங், ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஜெஸ் ஜோனாசென், அனாபெல் சதர்லேண்ட், மரிசான் கப், சாரா பிரைஸ், நிகி பிரசாத், மின்னு மணி, ஷிகா பாண்டே, என் சரணி ஆகியோர் விளையாடுகின்றனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru Squad) அணியில் இன்று ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana), டேனி வியாட்-ஹாட்ஜ், எலிஸ் பெர்ரி, ரக்வி பிஸ்ட், ரிச்சா கோஷ், கனிகா அஹுஜா, ஜார்ஜியா வேர்ஹாம், கிம் கார்த், சினே ராணா, ஏக்தா பிஷ்ட், ரேணுகா சிங் தாக்கூர் ஆகியோர் விளையாடுகின்றனர்.
டாஸ் வென்ற டெல்லி பௌலிங் தேர்வு:
🚨 Toss 🚨@DelhiCapitals won the toss and elected to bowl against @RCBTweets
Updates ▶️ https://t.co/pTL9a8wDJL#TATAWPL | #RCBvDC pic.twitter.com/Qen3ozLL2A
— Women's Premier League (WPL) (@wplt20) March 1, 2025